கோவைப்புதூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இடைத்தரகர்கள் தலையீடு ஏன்..?
கோவைப்புதூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இடைத்தரகர்கள் தலையீடு அதிகம் : நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை! கோவை., ஏப்., 25 :கோவைப்புதூர் பகுதியில் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு நாள்தோறும் வாகன பதிவு, எப்.சி. சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், புதுப்பித்தல் உள்ளிட்ட சான்றிதழ்களை பெற ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும் இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் ஆன்லைன்
மூலமாக மட்டுமே பெறப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை parivahan என்ற இணையதளம் மூலம் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற் வெளியே உள்ள இடைத்தரகர்கள் உதவியின்றி சேவைகளை பெற இயலாத சூழலாகிவிட்டது. மேலும் இந்த சேவைகளை பெற பொதுமக்கள் அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக சில ஆயிரங்களை செலுத்தினால் மட்டுமே தரகர்களின் மூலம் சான்றிதழ்களை பெற முடியும். பணபலம் உள்ளவர்கள் இதை பற்றி கவலைபடுவதில்லை, ஆனால் நடுத்தரமக்களிடம் ஆயிரக்கணக்கில் பணத்தை கேட்பதால் யாரிடம் முறையிடுவது என்று தெரியாமலும், தரகர்கள் கேட்கும் பணத்தை கொடுக்கும் நிலைக்கு ஆளாகி விடுகின்றனர். இது குறித்து பொதுமக்கள் ஒருவர் கூறுகையில் மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி பொதுமக்கள் இடைத்தரகர்கள் துணையின்றி நேரடியாக இந்த சேவையை பெற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்ட நிருபர்
க. அஜித் குமார்