கோவை மாவட்டத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ள முதலமைச்சர்
ஸ்டாலின், ஈச்சனாரியில் நடைபெறும் அரசுத்திட்ட விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில்
பொள்ளாச்சி கோட்டூர் பகுதில் இலங்கை தமிழர்களுக்கு
429 வீடுகள் உட்பட
ரூ.662.50 கோடி மதிப்பில்
748 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும்
ரூ. 588.19 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
1,07,062 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன், பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரம், திருச்செங்கோடு எம்.எல்.ஏ ஈஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு
5வது முறையாக கோவை வந்திருப்பதாகவும், இது கோவை மாவட்டத்தின் மீதும் மக்கள் மீதும் தான் வைத்திருக்கும் அன்பின் அடையாளம் எனவும் கூறினார். இந்த கூட்டத்தில், திமுக ஆட்சியின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை தெரிகிறது எனவும் எதிர்கால தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை மக்கள் முகத்தில் இருக்கும் மலர்ச்சி, மகிழ்ச்சியின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது என கூறினார்.