fbpx
Others

கோவை-அருள்மிகு வீராமாத்ரே அம்மன் திருக்கோயிலில் குடமுழுக்கு–செய்தி

கோவைமாவட்டம் ஈச்சனாரி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வீராமாத்ரே அம்மன் திருக்கோயிலில் குடமுழுக்கு பணிகளில் ஶ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் போத்தனூர் ஶ்ரீராம் நகர் பகுதிகளை சார்ந்த சேவாதள தொண்டர்கள் அன்னதானம் மற்றும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுபடுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.
காலை முதல் பல்வேறு பூஜைகள் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. பின்னர் கலசங்களுக்கு புனித தீர்தங்கள் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. காலை முதல் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
இந்நிகழ்வில் சேவாதள தொண்டர்கள் திரு.பூபதி திரு.கமல்நாத் திரு.சிராஜ் திரு. ஹரிஹரன் திரு.சுரேந்திரன் திருமதி சந்திர பூபதி திரு. பிரபு திரு.அஜித் குமார் ஆகியோர் கலந்துகொண்டு சேவைபணியாற்றினர்.

Related Articles

Back to top button
Close
Close