fbpx
Others

கோபிசெட்டிபாளையம்வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு…

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வாய்க்காலில்மூழ்கிபள்ளிமாணவன்உயிரிழந்தான்.கோபி அருகே உள்ள புளியம்பட்டி எரப்பநாயக்கன்பா ளையத்தைச் சேர்ந்தவர் நட ராஜ் (வயது 45) கூலித்தொழி லாளி. இவருடைய மகன் தீபக் (9) அந்த பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.இந்த நிலையில் நேற்றுபள்ளி விடுமுறை என்பதால் னது நண்பர்களுடன் தீபக் காளிகுளம் கீழ்பவானி வாய்க்காலுக்கு குளிக்க சென்றான். அப்போது வாய்க்காலின் ஆழமான பகுதிக்கு தீபக் சென்றதாக தெரிகிறது.தீபக்குக்கு நீச்சல் தெரியாத தால்தண்ணீரில் மூழ்கினான். உடனே அங்கிருந்தவர்கள் அவனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் தீபக்கை சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயேதீபன்உயிரிழந்தான்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்.

Related Articles

Back to top button
Close
Close