கோபி நகராட்சியில் இலஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனை…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் கட்டிட அனுமதி
வேண்டி விண்ணப்பித்த வருண் என்பவரிடம் வரைபடம் தருவதற்கு ரூ.30ஆயிரம் இலஞ்சம் கேட்டுள்ளார் .இதனையடுத்து வருண் ஈரோடு இலஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்த தன் அடிப்படையில் நேற்று வருணிடம் ரசாயனம்தடவியநோட்டுகளுடன் 30ஆயிரம் இலஞ்ச பணத்தை கொடுத்து விட்டு வெளியே வந்து விட்டார்.வெளியே வந்த போது இலஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் உள்ளே சென்று இளநிலை உதவியாளர் சுப்பிரமணி 30 ஆயிரம் பணத்தை தனது மேஜையில் வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடித்தனர்.உடனே ஈரோடு இலஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் இளநிலை உதவியாளரை கைது செய்து மேலும் கட்டிட அனுமதி கோரி விண்ணப்பித்து வரைபடம் பெறுவதற்காக பல்வேறு நபர்களிடம் லஞ்சம் பெற்றுள்ளாரா என்பது குறித்து ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் 6பேர் கொண்டகுழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர் இதனால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்