Others
கோபி கூட்டுறவு சங்கத்தில் ரூ.10 லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம்…

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்ப னைச்சங்கத்துக்கு 3 ஆயிரத்து 837 வாழைத்தார்கள் விற்பனைக்காககொண்டுவரப்பட்டன. இதில்கதலி (கிலோ) ரூ.42-க்கும், நேந்திரன் ரூ. 66-க்கும் ஏலம் போனது. பூவன் (தார்) ரூ.650-க்கும், தேன்வாழை ரூ.670-க்கும், செவ்வாழை ரூ.1,300-க்கும், ரஸ்தாளி ரூ.600-க்கும், பச்சைநாடன் ரூ.490 – க்கும். ரொபஸ்டா ரூ.410-க்கும், மொந்தன் ரூ.400-க்கும் விற்பனை யானது. மொத்தம் ரூ.10 லட்சத்து 70 ஆயிரத்துக்கு வாழைத் தார்கள் விற்பனை செய்யப்பட்டது. மாவட்ட நிருபர் சுரேஷ்குமார்