கொசுமனிதர்களைக் கடிக்கும்போதுவைரஸ்புகுந்துபாதிப்பு…?
இந்த காலகத்தில் திடீர் திடீரென நாம் எதிர்பார்க்காத நேரங்களில் வைரஸ் பாதிப்புகள் திடீரென வேகமாகப் பரவுகின்றன. இவை எங்கு கொரோனா போல ஒரு பெருந்தொற்றை ஏற்படுத்திவிடுமோ என்பதே மக்களின் அச்சமாகஇருக்கிறது.இந்தச்சூழலில்தான்ஐரோப்பாவில்பரவும்வெஸ்ட்நைல்வைரஸ்இப்போதுஅச்சத்தைஅதிகரித்துள்ளது. இத்தாலியின் லாசியோ பகுதியில் வசிக்கும் வயதான பெண் ஒருவர் வெஸ்ட் நைல் வைரஸ் (WNV) தொற்றால் உயிரிழந்துள்ளார். அங்கு நாடு முழுவதும் இந்த வைரஸால் ஏற்பட்ட 10ஆவது மரணம் இதுவாகும். இதுவரை ஐரோப்பாவில் 5 நாடுகளில் இந்த வெஸ்ட் நைல் வைரஸ் பரவியுள்ளது. லாசியோ பகுதியைப் பொறுத்தவரை, இது நான்காவது வெஸ்ட் நைல் வைரஸ் மரணம் ஆகும். சிஸ்டர்னா டி லத்தினாவைச் சேர்ந்த அவர், முதலில் வெல்லெட்ரியில்உள்ளசான்பவுலோமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,பின்னர்ரோம்நகருக்குமாற்றப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனில்லாமல்அவர்உயிரிழந்தார். வெஸ்ட் நைல் வைரஸ் என்பது க்யூலெக்ஸ் வகை கொசுக்களின் கடி மூலம் மனிதர்களுக்குப் பரவும் ஒரு நோயாகும். இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட பறவைகளைக் கடிக்கும்போது, அந்த கொசுக்களில் இந்த வைரஸ் புகுந்துவிடுகிறது. அவை பிறகு மனிதர்களைக் கடிக்கும்போது நமக்கு அந்த பாதிப்பு ஏற்படுகிறது.. மனிதர்களில் இந்த வைரஸ் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.வெஸ்ட் நைல் வைரஸ் தொற்றுள்ளவர்களில் சுமார் 80 சதவீதம் பேருக்கு எந்த அறிகுறிகளும் தெரிவதில்லை. இருப்பினும், மிதமான அறிகுறிகளாகக் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, தடிப்புகள் போன்றவை ஏற்படலாம். மூளை வீக்கம் (என்செபலைட்டிஸ்), மூளை மற்றும் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள சவ்வுகளில் ஏற்படும் வீக்கம் (மெனிஞ்சைட்டிஸ்) அல்லது கடுமையான தளர்வு வாதம் போன்ற தீவிர பாதிப்புகளும் கூட ஏற்படலாம். இப்போது வரை வெஸ்ட் நைல் வைரஸுக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. இருப்பினும், நாம் அறிகுறிகளுக்குக் கட்டுப்படுத்த மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், இனை நோய் உள்ளவர்கள், பலவீனமான நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. இங்கு இந்த நோயால் சமீபத்தில் உயிரிழந்த அனைவருமே 50 வயதைக் கடந்தவர்கள் ஆகும். ஜூலை மாதம் கடைசி ஒரு வாரத்தில் மட்டும் இத்தாலியில் 57 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 8 பேர் உயிரிழந்துள்ளனர்.நரம்பு மண்டலத்தைத் தாக்கி முடங்கும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டோரில் 20% வரை
உயிரிழப்பதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இது 2024இல் 14 சதவீதமாகவும், 2018இல் 20 சதவீதமாகவும் இருந்தது. இதுவரை இந்த வைரஸ் பாதிப்பு இத்தாலி, கிரீஸ், ருமேனியா, பல்கேரியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வழக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக இத்தாலியின் லத்தினா மாகாணத்தில் 43 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வைரஸ் மேலும் பரவாமல் இருக்கவும் அதைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை ஐரோப்பியச் சுகாதார அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள்.