குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்ற யோகாசன பயிற்சி …..

நீடாமங்கலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்ற யோகா பயிற்சி வகுப்பு நடைபெற்றது. நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக யோகா பயிற்சி வகுப்பு தலைவர் பத்மஸ்ரீராமன்தலைமையிலும், காவல்துறை ஓய்வு மணிவண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி, பொறியாளர் சிதம்பரம் ரயில்வே நிலைய கண்காணிப்பாளர் ஓய்வு முத்துக்குமார், முன்னிலையில் நீடாமங்கலம் அரசு உதவி பெறும் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இம்முகாமில் யோகா பயிற்றுனர் பிரபாகரன், அறிவியல் இயக்க பொறுப்பாளர் பிளாட்டோ கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கினர். மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இந்த பயற்சியில் கலந்துகொண்டு பயன்பெற்றனர். பயிற்சியில் முதுகுவலி தொடர்பான சிகிச்சைகளுக்கான பயிற்சிகளும், அதற்கான யோகாசனங்களும் பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு வணிகர் சங்க துணைத்தலைவர், சமூக ஆர்வலர் ஜெயக்குமார் ஊக்க பரிசுகளை வழங்கினார். நிகழ்வில் வானவில் மன்ற கருத்தாளர் சுபாகர் மாணவர்களுக்கு அறிவியல் தொடர்பான கருத்துகளையும் , செய்முறைகளையும் பற்றி செய்து காட்டி விளக்கமளித்தார். மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான மேற்கொள்ளும் பயிற்சிகள் பற்றி செய்துகாட்டப்பட்டது.முன்னதாக செயலர் ஜெகதீஸ் பாபு வரவேற்றார் துணை செயலர் செந்தில்குமார் நன்றியுரையாற்றினார்.