குஜராத்– பாலம் இடிந்து விழுந்து விபத்து–11பேர் உயிரிழப்பு…
இந்த சம்பவம்வடோதரா மாவட்டம் பத்ரா தாலுகாவில் நடந்திருக்கிறது. இங்கு ஓடும் மஹிசாகர் ஆற்றின் குறுக்கே கம்பீரா – முஜிப்புர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் பாலம் கட்டப்பட்டிருந்தது.இந்த பகுதியில் இது முக்கியமான பாலம் என்பதால், தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர். நேற்றும் இப்படித்தான் பலரும் பள்ளிக்கும், வேலைக்கும் சென்றுக்கொண்டிருந்த நிலையில், திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்துஆற்றில் விழுந்தது. இதனால் பாலத்தில் சென்றுக்கொண்டிருந்த வாகனங்கள் சில கட்டுப்பாட்டை மீறி ஆற்றில் விழுந்தன. இதில் 3-5 பேர் வரை உயிரிழந்ததாக தகவல்கள் முதலில் வெளியாகின. தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும்சிலஆற்றில்விழுந்திருக்கலாம்என்றுசொல்லபடுவதால் அவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், “பாலம் பயங்கர சத்தத்துடன் விரிசல்விட்டது. அடுத்து சில நொடிகளுக்கெல்லாம் பாலம் சடசடவென சரிந்தது. இதில் 2 லாரிகள், ஒரு கார், சில பைக்குகள் அப்படியே ஆற்றுக்குள் விழுந்தது” என்று கூறியுள்ளனர்.இந்த விபத்து நடந்தவுடன் பொதுமக்கள் சிலர் ஆற்றில் இறங்கி, உயிருக்கு போராடியவர்களை மீட்டிருக்கின்றனர். ஆனாலும், உயிரிழப்புகள் தவிர்க்க முடியாமல் போய் இருக்கிறது. தற்போது தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புபடையினர்தேடுதல்பணிகளில்ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.பாலத்தை தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வந்தன. இருப்பினும் பாலத்தின் உறுதி தன்மையை பராமரிக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும், எனவேதான் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்த குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலைதெரிவித்திருக்கிறார். அதேபோல, உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50,000 நிவாரண உதவி வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். மாநில அரசு சார்பில் ரூ.4 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு மோர்பி பாலம், இந்த ஆண்டு மஹிசாகர் பாலம் என குஜராத்தில் தொடர்ந்து பாலம் இடிந்து விழுந்து விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.