fbpx
Others

காவல் கூடுதல் ஆணையர் கே.பவானீஸ்வரி மற்றும் போலீசார் 510 கிலோ கஞ்சாவைஎரித்தனர்..

ஆவடிகாவல்ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டத்தை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க ஆணையர் கி.சங்கர் உத்தரவிட்டுள்ளார். இதன் பேரில் ஆவடி, செங்குன்றம் காவல் மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் கீழ் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போதைப் பொருள்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆவடி ஆணையரகத்தின் மூலமாக நடவடிக்கை மேற்கொண்டு, 90 கஞ்சா வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து 510 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அழிப்பதற்காக நீதிமன்ற உத்தரவின் பேரில், காவல் கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி, துணை ஆணையர் பெரோஸ்கான் அப்துல்லா, தடய அறிவியல் துணை இயக்குநர் ஷோபியா ஜோசப் ஆகியோர் அடங்கிய தனி குழு அமைக்கப்பட்டது.செங்கல்பட்டு மாவட்டம், தென் மேல்பாக்கம் என்ற இடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 90 வழக்குகள் மூலம் கைப்பற்றப்பட்ட 510 கிலோ கஞ்சாவை காவல் கூடுதல் ஆணையர் கே.பவானீஸ்வரி மற்றும் போலீசார் எரித்து அழித்தனர்.இதுவரை 2024-ஆம் ஆண்டு 112 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் 40 லட்சம் மதிப்பிலான 399 கிலோ மற்றும் 2025 -ஆம் ஆண்டு 581 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான 2,892 கிலோ எடையுள்ள கஞ்சா எரித்து அழிக்கப்பட்டது.

 

Related Articles

Back to top button
Close
Close