Others
கல்வி வளர்ச்சிபெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்த நாள் விழா.
கல்வி வளர்ச்சி நாள் விழா
பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு மணிமேகலை நடுநிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விழாவில் பெருந்தலைவர் காமராஜர் பற்றிய தலைப்பில் பேச்சுப் போட்டிகளும் ஓவியப் போட்டிகளும் நடைபெற்றது இதில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு போட்டிகளில் பங்கேற்றனர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் கணேசன் பரிசுகளை வழங்கினார் பெருந்தலைவர் காமராஜர் ஆற்றிய அரும் பணிகளைப் பற்றி ஆசிரியரும் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்க செயலாளருமான ஜெகதீஷ் பாபு சிறப்புரை ஆற்றினார். முன்னதாக பட்டதாரி ஆசிரியர் ரவிச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார் உடற்கல்வி ஆசிரியர் அசோக் குமார் நன்றி உரையாற்றினார்.