கல்லூரி மாணவர்கள் 7 பேர் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைசெய்தவர்கள்கைது..

கோவையில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைசெய்யப்பட்டுள்ள சம்பவம்அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.கோவையை சேர்ந்த 17 வயது சிறுமி சமீபத்தில் மாயமானார். எங்கு தேடிகிடைக்காதநிலையில்அவரதுபாட்டிஉக்கடம்காவல்நிலையத்தில்சிறுமியைகாணவில்லை என புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் சிறுமி மறுநாள் காலையில் வீடு திரும்பியுள்ளார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சிறுமியிடம் விசாரிக்கையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.தனியார் கல்லூரி சேர்ந்த மாணவர்கள் சிலர் சிறுமியை அறையில் அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கல்லூரி மாணவர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் அழைத்ததன் பேரில் சிறுமி புல்லுக்காடு பகுதிக்கு சென்றதாக தெரிகிறது.சிறுமியை அந்த பகுதியில் ஒரு அறையில் வைத்து கல்லூரி மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள உக்கடம் காவல்துறையினர் கல்லூரி மாணவர்கள் 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்வு காரணமாக பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கோவை மாவட்ட நிருபர் க. அஜித் குமார்