கம்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்OR ராமச்சந்திரன் காலமானர்.

தேனி மாவட்டம் கம்பம் முன்னாள் சட்ட உறுப்பினரும் பிரமலைக்கள்ளர் சங்கத் தலைவருமான OR ராமச்சந்திரன் நேற்று அக்டோபர் 4 ந் தேதி பிற்பகல் காலமானார் இவருக்கு வயது 77 இவரது தந்தை O ராமசாமி தேவர் கம்பம் நகர்மன்றத் தலைவராக இருந்தவர் இவரது மூத்த மகன் OR ராமசந்திரன் ஆவார் இவர் கல்லுரி படிக்கும் காலத்தில் இருந்து தீவிர அரசியலில் ஈடுபட்டவர் இவர் மூன்று முறை தொடர்ந்து கம்பம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார் முதன் முதலில்1991ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அதற்கு அடுத்து 1996, 2001 களில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், மேலும் கள்ளர் கல்வி குழு தலைவராகம் பதவி வகித்து வந்தவர் ஆவார் இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர் இவரதுமனைவிசகுந்தலாசிலவருடங்களுக்குமுன்புஉடல்நலக்குறைவால் காலமாகி விட்டார்.கம்பம் தொகுதி முழுக்க இன்று ஒரு நாள் துக்கம்அனுசரிக்க படுகின்றன. மேலும் கம்பம் நகர் முழுவதும் முழு கடையடைப்பு செய்து துக்கம் அனுசரிக்கப்பட்டது. இன்று 05-10-2024 மாலை இறுதி ஊர்வலம் மற்றும் இறுதிச் சடங்கு நடைபெற்றன இறுதி சடங்கில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் வர்த்த சங்கத்தினர் தொழில் சங்கத்தினர் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் முன்னதாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்..
சிறப்பு நிருபர் நேசதேசன் ஜெ. ஹரி ஹரன்