கம்பம் அருகே இரு சக்கர வாகனத்தில்சென்றவர்கள் மூன்று பேர் பலி….


தேனி மாவட்டம் கம்பம் தனியார் கல்லூரிஅருகேபேசிக்கொண்டேஇருசக்கர வாகனங்களில் அதி வேகமாக சென்றவர்கள் இரண்டு இரு சக்கர வாகனங்கள் நிலைதடுமாறி தவறிவிழுந்து மோதிய விபத்தில் மூன்று பேர் பலி. இந்த விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த கம்பம் வடக்குப் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியான கூடலூரை சேர்ந்த சரவணன் மகன் லிங்கேஸ்வரன், (24)அதே ஊரை சேர்ந்த விஜய் கணேசன் மகன் சேவாக்(23) மணிகண்டன் மகன் சஞ்சய் (22) ஆகிய மூன்று பேரின் உடலை கைப்பற்றி உடற்கூர் ஆய்விற்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அதே ஊரைச் சேர்ந்த இருவர் பலத்த காயம் அடைந்த மோனிஷ் (22), கேசவன் (22) ஆகியோர் தேனி கானா விளக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்ப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த இரு சக்கர வாகன விபத்துக்குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகையன்று விபத்தில் பலியான இளைஞர்கள் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர். மேலும் இது போன்ற விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க பெற்றோர்கள் மிககவனமுடன் இருப்பதோடு அவர்களுக்கு அதிக CC உள்ள மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்க கூடாது என போலீசாரும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.