கட்சி மாறுகிறாரா தொண்டாமுத்தூர் ரவி..?

கட்சி மாறுகிறார தொண்டாமுத்தூர் ரவி ? வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவியை நீக்க கோரி நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றம் ?
கோவை,ஜுன்,19:கோவையில் மாவட்டச் செயலாளரை நீக்க கோரி தி.மு.கவினர்ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தி.மு.க. வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது? கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. வில் அதிருப்தியாளர்கள் ஒன்றிணைந்து கூட்டம் போட தயாராகிவருகின்றனர் ! கோவை தெலுங்குபளையம் S.J மண்டபம் பின்புறம் உள்ள இடத்தில் பந்தல் அமைத்து இந்த கூட்டம் நடக்கவுள்ளது ! கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் அ. ரவியை நீக்க கோரி தீர்மானம் நிறைவேற்றும் கூட்டம்தான் அது! தொண்டாமுத்தூர் தொகுதி முழுவதும் உள்ள அதிருப்தியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியின் மாவட்ட பிரதிநிதிகள், அணிகளின் மாவட்ட துணை அமைப்பாளர்கள், முன்னாள் வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் மூத்த முன்னோடிகளை சந்தித்து கூட்டத்திற்கு முறைப்படி அழைப்பு விடுக்கவுள்ளனர். அதிருப்தியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு தொண்டாமுத்தூர் தொகுதியில் தி.மு.க. வை மீட்க வருகை தந்து ஆதரவளிக்க வேண்டுகிறோம். என்று வாசகத்துடன் சிலரது அலைபேசி எண்ணுடன் கோவையில் உள்ள தி.மு.க முகநூல் பக்கம், வாட்ஸ்-அப் குரூப்புகளில் இந்த செய்தி பரவி வருகிறது. அ.தி.மு.க வின் முன்னால் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியிடம் பண பேரம் ?முன்னால் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியிடம் தொண்டாமுத்தூர் ரவி, தன் உள்ள தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் அதற்காக தேர்தலில் நிற்காமல் இருக்க எஸ்.பி. வேலுமணியிடம் பல கோடி ரூபாய் பணம் வாங்கி இருப்பதாகவும் ? அவரின் நெருங்கிய உடன்பிறப்புகள் சிலர் தகவல் தெரிவித்துள்ளனர் ! தி.மு.க உறுப்பினர்களை மதிப்பதில்லை ?தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, மாவட்ட தி.மு.க வினரை மதிப்பதில்லை என்றும், தொலைபேசியில் தொடர்பு கொண்டால் அவர் அதை எடுப்பதில்லை என்றும், அவரின் சாதி காரர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தருவதாகவும், குறிப்பாக கன்னடம் பேசும் முகம் தெரியாத நபர்களுக்கு இவர் உதவி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோவை மாவட்ட தி.மு.க வினர் வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவியின் உதவியை வேண்டி சிலர் தங்களுக்கு தெரியாத மொழியான கன்னடத்தை ரவிக்காக கற்றுக்கொண்டு வருகின்றனர். கட்சி மாறும் தி.மு. கவினர்?வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவியின் இந்த போக்கை கண்டித்து கோவை மாவட்டத்தை சேர்ந்த சுமார் 10000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
நிர்வாகிகள்மற்றும்தொண்டர்கள் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க விற்க்கு செல்ல உள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது ? கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் முயற்ச்சியால் கடந்த சில ஆண்டுகளாக திமுக வசம் இருந்த கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ரவியின் செயல்பாட்டல் தற்போது அ.தி.மு. கவின் கட்டுப்பாட்டில் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த விவகாரத்தில் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டாமுத்தூர் ரவி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பலத்த குரல் எழுந்துள்ளது.