கடப்பந்தாங்கல் ஏரியில் பதுக்கி வைத்திருந்த மணல் வருவாய்த் துறையினர் பறிமுதல்…

ஆற்காடு ஜூன் 20.-ஆற்காடு அடுத்த கடப்பந்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட ஏரி பகுதியில் மர்ம நபர்கள் ஆற்று மணலை கடத்தி வந்து கள்ளத்தனமாக பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர் இந்த நிலையில் 19.06.25 அன்றுஇரவு சுமார் எட்டு மணிக்கு பதுக்கி வைத்திருந்த மணலை பொலிரோ வாகனத்தில் ஏற்றி செல்லும்போது அவ்வூர் பொதுமக்கள் மடக்கிப் பிடிக்க முயன்றனர் அப்பொழுது மணலை ஏற்றிச் சென்ற வாகனம் மின்னல் வேகத்தில் முந்தி சென்று தப்பித்து விட்டனர்அதனைத் தொடர்ந்து வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் தகவல் அறிந்த புதுப்பாடி வருவாய் ஆய்வாளர் ராமு சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு மணலை பறிமுதல் செய்ததார் மேலும் வட்டாட்சியர் மகாலட்சுமி தலைமையில் பொதுப்பணித்துறை முன்னிலையில் பொது ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது மணல் கடத்தலில் ஈடுபடும் சமூக விரோதிகளை விரைவில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.