எம்.சரவணன்மீது வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு…
சாத்தூர் ஊராட்சி செயலாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு மாவட்டத் காவல்துணைகண்காணிப்பாளர்உத்தரவின்படி ஆற்காடு தாலுகா போலீசார் அதிரடி நடவடிக்கை ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.சரவணன் இவர் தற்போது சாத்தூர் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணி செய்து வருகிறார் இவரின் தகப்பனார் மணிவண்ணன்இவர் கிராம நிர்வாக அலுவலராக பணி செய்து வந்துள்ளார் இந்த நிலையில கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு வேலையில் இருக்கும் போதே பணி நிறைவு பெறாமலேயே இறந்துவிட்டார்இவருக்குஇரண்டுமகன்கள்மூத்தவன்சரவணன்இளையவர்கார்த்திக்தகப்பனார் வேலையில் இருக்கும் பொழுதே மரணமடைந்ததால் வாரிசுதாரருக்கு அரசு வேலை என்ற அடிப்படையில் அதற்குரிய முயற்சி செய்து சரவணன் விஏஓ வாக அரசு வேலையில் சேர்ந்துள்ளார் வேலையில் சேர்ந்த 6 மாதத்தில் தனது வேலையை தன்னுடைய தம்பி கார்த்திக்குக்கு மாற்றம் செய்துவிட்டு அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவர்களின் உதவியால் ஊராட்சி செயலாளராக அரசு வேலையை வாங்கியுள்ளார்ஊராட்சி செயலாளராக பணி செய்து வந்த இவர் நந்தியாலம் ஊராட்சி செயலாளராகவும் வேப்பூர் இன்சார்ஜ் செயலாளராகவும் பணி செய்து வந்துள்ளார் மேலும் இவர் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள்
சங்கத்தில் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று செயல்பட்டு வந்துள்ளார் சங்கம் இருக்கும் சப்போர்ட்ல தலைகனம் தலைக்கேறி துறை சார்ந்த அதிகாரிகளை மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசி அவ மரியாதையாக நடந்துள்ளார். ஊராட்சி வேலைகளிலும் சரிவர செயல்படாமல் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் நக்கல் நையாண்டி செய்து தனக்குரிய பாணியில் செயல்பட்டு வந்துள்ளார்இவரின் நடவடிக்கைகளும் செயல்பாடுகளையும் கவனித்து வந்த அதிகாரிகள் மாவட்ட ஊரக வளர்ச்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர் இவரை விசாரணை செய்த அதிகாரிகள் இவரின் ஒழுங்கீனமான நடவடிக்கைக்கு பரிசாக சாத்தூர் ஊராட்சிக்கு இடமாற்றமும் செய்துள்ளனர் கடந்த
02.06.25 அன்று சாத்தூர் ஊராட்சி செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட சரவணன் இரண்டு வாரம் மட்டுமே வேலை செய்துவிட்டு அதே மாதத்தில் 10 நாட்கள் தொடர்ந்து விடுப்பு எடுத்துள்ளார்விடுப்பு எடுப்பதைக் கூட ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெருவிக்காமல் நேரடியாக வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கடிதம் கொடுத்துவிட்டு ஊராட்சி மன்ற தலைவர் ச.மா. சேட்டுவை அவமதிப்பு செய்துள்ளார் மீண்டும் மறு மாதத்திலும் அடிக்கடி விடுப்பு எடுத்துள்ளார்இதனால் ஊராட்சி வேலைகளில் தடை ஏற்பட்டுள்ளது ஊராட்சி மன்ற தலைவர் ச.மா. சேட்டு ஊராட்சி செயலாளர் சரவணனை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்அதற்கு அவர் நான் பீசி உயர் ஜாதிக்காரன் நீ எஸ்சி தலைவர்நீ சொல்லுகிறபடியெல்லாம் என்னால் வேலை செய்ய முடியாது நீ எனக்கு அதிகாரியும் கிடையாதுஎன்று மிரட்டும் பாணியில் பேசியிருக்கிறார் மேலும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநிலத் தலைவர் அ.ஜான் போஸ்கோ பிரகாஷ் என்பவரிடம் ஊராட்சி மன்ற தலைவரின் போன் நம்பரை கொடுத்து அவரையும் பேச வைத்திருக்கிறார் மாநிலத் தலைவர் ஜான் போஸ்கோ ஊராட்சி மன்ற தலைவர் ச.மா சேட்டுவை தொடர்பு கொண்டு உன்னை ஒழித்து கட்டி விடுவேன், உன்னால் எதுவும் செய்ய முடியாதுஎன பேசி மிரட்டி இருக்கிறார் இவர்களின் அத்துமீறிய மிரட்டுதல்களை பொறுக்க முடியாமல் கடந்த 25.7. 2025 அன்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர் எம்.சரவணன் மீது ஊராட்சி மன்ற தலைவர் சேட்டு புகார் கொடுத்துள்ளார் புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் இமயவர்மன் இரு தரப்பினரையும் நேரில் அழைத்து விசாரணை செய்து வன்கொடுமை சட்ட பிரிவின்படி நான்கு பிரிவின் கீழ் ஊராட்சி செயலாளர் எம். சரவணன் மீது (எஃப் ஐ ஆர்) முதல் தகவல் அறிக்கைபதிவு செய்ய உத்தரவிட்டதன் அடிப்படையில் ஆற்காடு தாலுக்கா போலீசார் உதவி ஆய்வாளர் மனோகரன் வழக்கு பதிவு செய்துள்ளார் ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்ற நாள் முதல் ச.மா சேட்டுதுணைத் தலைவர், ஊராட்சி செயலாளர்களால் பல இன்னல்களை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதுஇக்காலத்தை கலியுலக காலம் என்கிறார்கள் இக்கலியுலக காலத்தில் என்ன தான் அறிவு பெருகியிருந்தாலும் சரவணனை போன்றமனிதர்களிடையேயுள்ள சாதி வன்மம் என்கின்ற புத்திமாறவில்லை தமிழகத்தில் அடிக்கடி நடந்து வரும் ஆணவப் படுகொலைகளும் இதற்கு உதாரணமாக இருக்கிறது தனிமனித மனமாற்றமே சகோதரத்துவம்,சமத்துவத்திற்கான வழி, என்று மாறும் இந்த மானுட சமுதாயம்.