ஊத்துக்கோட்டை – பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பாக பொது உறுப்பினர்கள் கூட்டம்

ஊத்துக்கோட்டை அருகே பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பாக தனியார் திருமண மண்டபத்தில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பாக பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய கழகச் செயலாளர் டி.கே.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட அவைத்தலைவர் பகலவன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் பி.ஜெ.மூர்த்தி, வழக்கறிஞர் ஜான் என்கின்ற எம்.பொன்னுசாமி, ஊத்துக்கோட்டை பேரூர் கழக செயலாளர் அபிராமி குமரவேல், மாவட்ட கவுன்சிலர் சுதாகர், பூண்டி கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் நந்திமங்கலம் பாபு, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் காண்டீபன், ஒன்றிய பொருளாளர் சுரேஷ் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், கலைஞருக்கு ரூபாய் 100 நாணயம் வெளியிட்டதற்கும், கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம் மூலம் ரூபாய் 1000 வழங்கியதற்கும் முதல்வருக்கு நன்றி. விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநில மற்றும் மாவட்ட அணிகளின் செயலாளர்கள் ம துணைச் செயலாளர்கள் சி.எச்.சேகர், பாஸ்கர் சுந்தரம் கன்னிகை ஜி.ஸ்டாலின், எம்.எல்.ரவி, கதிரவன், கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, மாவட்ட பொருளாளர் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் ஏ.வி.ராமமூர்த்தி வி.பி.ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இந்த கூட்டத்தில் கழக ஆக்கப் பணிகள் குறித்தும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாநில மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் மற்றும் சிவய்யா, வக்கீல் வெஸ்லி, தாமோதரன், கணேசன், சாந்தகுமார், டார்லிங் ராஜா, நளாயிணி,கச்சூர் ரஞ்சித், கே.இ.யுகேந்தர, அனந்தேரி மோகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த பூண்டி கிழக்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் போந்தவாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும் ஒன்றிய துணைச் செயலாளருமான சித்ரா பாபு நன்றி கூறினார்.