ஊத்துக்கோட்டை-திமுக அரசை கண்டித்து அஇஅதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் திமுக அரசை கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் முன்னாள் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும், எல்லாபுரம் ஒன்றிய கழகச் செயலாளர் கே.எஸ்.விஜயகுமார்தலைமையில்நடைபெற்றது. போராட்டத்தில் 40 மாத காலமாக தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாகவும் மற்றும் சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், பால் விலை உயர்வு, பத்திர பதிவு கட்டண உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விளை உயர்வு, மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய், தெருக்கள் தோறும் கஞ்சா புழக்கம் போன்றவற்றை கண்டித்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.இப் போராட்டத்தில் பூண்டி ஒன்றிய பெருந்தலைவர் வெங்கட்ரமணா, பூண்டி ஒன்றிய செயலாளர் பி.எம். பிரசாத், ஊத்துக்கோட்டை அஇஅதிமுக பேரூர் கழகச் செயலாளர் ஷேக் தாவூத், திருவள்ளூர் வடக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசரை துணைத் தலைவர் கீழ்கருமனூர் கண்டிகை சதீஷ் எல்லாபுரம் இணைச்செயலாளர் வேதகிரி அவைத் தலைவர் அருணாச்சலம், மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணி, பேரூர் கழக துணைச் செயலாளர் வி.எஸ்.சுகுமாரன், பேரூர் கழக பொருளாளர் பாபு என்கிற பிரபாகரன், கே.எஸ். ஜோதி ராமலிங்கம், ஜாலி பெருமாள் மற்றும் கட்சித் தொண்டர்கள் 150 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் மா.மருதுபாண்டி