fbpx
Others

உத்தரப்பிரதேசம்–கும்பமேளாவில் திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு…

      Kumbh Mela: Millions gather in India for world's largest religious event

உத்தரப்பிரதேசம்: பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் ஏற்பட்டதிடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். பெண்கள் உள்பட 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தை அமாவாசை என்பதால்அதிகாலைமுதலேலட்சக்கணக்கானோர் திரண்டதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கடந்த 13-ம் தேதி மகா கும்பமேளா விழா தொடங்கியது. அங்கு திரிவேணி சங்கமத்தில் நாள்தோறும் சுமார் ஒரு கோடி பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்ல சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.மகா கும்பமேளாவின் 16-வது நாளான நேற்று ஒரே நாளில் 3.90 கோடி பேர் புனித நீராடினர். அவர்களையும் சேர்த்து இதுவரை 17.5 கோடி பேர் புனித நீராடி உள்ளனர்.வடஇந்தியாவில் மக மாதத்தில் வரும் அமாவாசை, மவுனி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இதையொட்டி மகா கும்பமேளாவில் இன்று 10 கோடிக்கும்மேற்பட்டபக்தர்கள்புனிதநீராடுவார்கள்என்றுஎதிர்பார்க்கப்பட்டது.உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்ததையடுத்து புனித நீராடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் நேற்று மட்டும் 3.90 கோடி பக்தர்கள் புனித நீராடினர். மீண்டும் கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் பக்தர்களை பிரித்து அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர். மவுனி அமாவாசை என்பதால் அதிகாலை முதலே லட்சக்கணக்கானோர் திரண்டதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த பிரதமர் மோடி உத்தரவு அளித்துள்ளார். அமாவாசையை ஒட்டி இன்று 10 கோடி பேர் நீராடுவர் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில் பலர் காயமடைந்த நிலையில் உடனடியாக அவசர ஊர்திகள் விரைந்தன. மவுனி அமாவாசையை ஒட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் தற்போது சுமார் 20 கி.மீ. தொலைவுக்கு வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கிறது.

Related Articles

Back to top button
Close
Close