fbpx
Others

உச்சநீதிமன்றத் புதிய தலைமை நீதிபதி சூா்ய காந்த் இன்று பதவி ஏற்ப்பு…..

Justice Surya Kant says India is becoming preferred place for dispute ...உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் நவம்பர் 23 ஆம் தேதி மாலையுடன் ஓய்வுபெற்றுள்ளார். அவரைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தின் அடுத்த புதிய தலைமை நீதிபதியாக சூா்ய காந்த் இன்று பதவி ஏற்கவுள்ளார்.புதிய தலைமை நீதிபதியாக சூரியகாந்த் கடந்த அக்டோபா் 30 ஆம் தேதி நியமிக்கப்பட்ட நிலையில், இன்று பதவியேற்பு நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில், சூா்யகாந்த் பதவியேற்கிறார். இவர், வரும் 15 மாதங்களுக்கு அந்தப் பதவியில் நீடிக்கவுள்ளார்.  ஹரியாணா மாநிலம், ஹிசாா் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சூரியகாந்த். 1962 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி பிறந்த இவர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் நீதிபதி சூா்ய காந்த் பணியாற்றி வந்தார். பின்னர், ஹிமாச்சலப்பிரதேச உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டாா். இதைத்தொடா்ந்து, உச்சநீதிமன்ற நீதிபதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் பதவியேற்றாா்.உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது சூர்யகாந்த் பல்வேறு முக்கியத் தீர்ப்புகளை வழங்கியுள்ளார். பேச்சு சுதந்திரம், ஜனநாயகம் தொடா்பான பல்வேறு முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அதேபோல, மசோதாக்களை நிறைவேற்ற குறிப்பிட்ட காலக்கெடு ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு விதிக்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கை விசாரிக்கும் அமர்வில் சூர்யகாந்தும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும், பீகார் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தின்போது நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளா்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என்ற முக்கிய தீா்ப்புகளை அளித்த அமா்வுகளில் நீதிபதி சூா்ய காந்த் இடம்பெற்றிருந்தாா்.

Related Articles

Back to top button
Close
Close