ஈரோடு நாயுடு திருமண தகவல் மையத்தில் சந்திப்பு கூட்டம்..
ஈரோடுமாமன்னர்திருமலை நாயக்கர் பண்பாட்டுக் கழகத்தின் சார்பாக ஈரோடு நாயுடு திருமண தகவல் மையத்தில் மாதாந்திர சந்திப்பு கூட்டம் வெகு சிறப்பாக நடந்து வருகிறது.அந்த வகையில் இந்த மாதம் மூன்றாவது மாத நிகழ்வாக சிறப்பாக நடைபெற்றது சிறப்பாக ஈரோடு NT பரந்தாமன் அவர்களும் M.K ராஜா அவர்களும் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர் .நிகழ்ச்சியில்குடும்பத்துடன் சந்திக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று M.K ராஜா அண்ணன் அவர்கள் கேட்டிருந்தார் அதன் அடிப்படையில் வருகின்ற மாதம் ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் ( Textile Business) அவர்கள் இல்லத்தில் நிகழ்ச்சி நடத்த செந்தில் குமார் அவர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளார்.
மேலும் எதிர்வரும் காலங்களில் இவ்விழாவை நலத்திட்ட உதவிகள் செய்து சிறப்பாக நடத்த பல்வேறு ஆலோசனைகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவராலும் வழங்கப்பட்டன