fbpx
Others

ஈரோடு–சத்தியமங்கலத்தில் லாட்டரி விற்றவர் கைது..

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள வடக்கு பேட்டை பஸ் ஸ்டாப் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.அதன்பேரில், சத்தி போலீசார் நேற்று முன்தினம் அங்கு விரைந்து சென்று கேரளா மாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த வடக்குபேட்டை தண்டுமாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த விஜயகுமார் (45) என்பவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 18 லாட்டரி சீட்டு மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மாவட்ட நிருபர் சுரேஷ்குமார்

Related Articles

Back to top button
Close
Close