Others
ஈரோடு–கோபியில் குக்கர் வெடித்து பெண் சாவு….

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த அடுத்த பொம்மநாய்க்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் ரமணி(63). தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (60). இவர் கடந்த 18ம் தேதி வீட்டில் குக்கரில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அடுப்பில் இருந்த குக்கர் எதிர்பாராத விதமாக திடீரென வெடித்தது. அதிலிருந்து கூடு தண்ணீர் அவரது மார்பு மற்றும் வயிற்று பகுதியில் பட்டு படுகாயமடைந்தார்.உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி உயிரிழந்தார். கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மாவட்ட நிருபர் சுரேஷ்குமார்