இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை விளக்கம்!

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், “காவனூர் பகுதியை சேர்ந்த தெய்வசெயல் என்பவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து வன்கொடுமை செய்ததாக அளித்த புகாருக்கு நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை” என்று கூறும் உண்மைக்கு புறம்பான பதிவுகள் சமூக வலைதளங்களில்பகிரப்படுகிறது.மேற்படி பெண் கொடுத்த புகாரின் பேரில் கடந்த 10.05.2025 அன்றே அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு எண். 25/2025 பதியப்பட்டு புலன் விசாரணையில் இருந்துவருகிறது. மேலும், இவ்வழக்கின் புகார்தாரர் இதே சம்பவம் தொடர்பாக மற்றொரு புகாரையும் கொடுத்துள்ள நிலையில்அதில்குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளையும் விசாரிக்கப்பட்டு வருகிறது.இவ்வழக்கின்முதல்தகவல்அறிக்கையினை பெற்றுக்கொள்ள புகார்தாரர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.மேலும் இவ்வழக்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் இவ்வழக்கின் புகார்தாரரான பெண், ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்து, பின் விவாகரத்து பெற நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கானது நிலுவையில் இருந்து வருவது தெரியவருகிறது.இந்நிலையில், புகார்தாரரும், இவ்வழக்கின் எதிரி தெய்வச்செயல் என்பவரும் அவர்களது முந்தைய திருமணங்களில் முறையான விவாகரத்து பெறாமல், சுமார் 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த 31.01.2025 அன்று கரிக்கல் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக விசாரணையின்போது புகார்தாரர் தரப்பில் திருமண புகைப்படங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது.இவ்வழக்கில் மேலும் விசாரணை மேற்கொண்டு, அதன் அடிப்படையில் சட்டரீதியான நடவடிக்கை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.மேற்கொள்ளப்படும் என்பதைசமூக ஊடகப்பிரிவு, இராணிப்பேட்டை மாவட்டம்.