fbpx
Others

இபிஎஸ், ஓபிஎஸ் –பிரதமரை தனித்தனியே சந்திக்க திட்டம்..,

எடப்பாடி & ஓபிஎஸ்!" பிரதமரின் சென்னை பயணத்தில் நடக்கப் போகும் 'சம்பவம்'? பரபரக்கும் அதிமுக தலைகள் | ADMK crisis PM Modi to meet both EPS and OPS in Chennai during Chess ...

ஏப்.6ம் தேதி பிரதமர் மோடியை இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் தனித்தனியே சந்தித்து பேசுகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி வரும் 6ம் தேதி ராமேஸ்வரம் வருகிறார். ஏப்.6ம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசுகிறார். ஏப்.6-ல் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை மதுரை விமான நிலையத்தில் சந்திக்க எடப்பாடி தரப்பில் நேரம் கேட்டிருந்தனர். நேரம் தரப்பட்டுள்ளதை அடுத்து மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்தித்துப் பேச உள்ளார்.  எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார். ஏப்.6ம் தேதி பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியே சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் மோடியை எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியே சந்தித்து பேச இருப்பதால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி, மோடியை சந்திக்க இருப்பதால் கூட்டணி பேச்சு இறுதிக்கட்டத்தை எட்டுகிறது. அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை வேகம் எடுப்பதால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது…

Related Articles

Back to top button
Close
Close