fbpx
Others

இன்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா சென்னை வருகை…

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை வருகை - இபிஎஸ், ஓபிஎஸ்ஸை  சந்திக்க திட்டம் | Union Home Minister Amit Shah to visit Chennai today -  plan to meet EPS, OPS - hindutamil.in2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், கடந்த மாதம் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அவரை தொடர்ந்து, அடுத்த நாளே, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டெல்லி சென்று அமித் ஷா, பி.எல்.சந்தோஷ், ஜெ.பி.நட்டா ஆகியோரை சந்தித்தார்.இதையடுத்து, 2026 தேர்தலில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என அமித் ஷா நம்பிக்கை தெரிவித்திருந்தார். இதனால், அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதே நேரத்தில் பழனிசாமியுடன் இணைந்து செயல்பட அண்ணாமலை விம்பவில்லை எனவும், எனவே பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து தாமாகவே அவர் விலகுவதாக டெல்லி மேலிடத்தில் கூறியதாகவும் தகவல் வெளியானது. மேலும், பாஜக மாநில தலைவர் போட்டியில் தான் இல்லை என்றும், யாரையும் கைக்காட்டவில்லை என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்நிலையில், பாஜகவின் அடுத்த மாநில தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக மாநில தலைவர் போட்டியில், நயினார் நாகேந்திரன் முன்னிலையில் இருப்பதாகவும், அவரே புதிய மாநில தலைவராக நியமிக்கப்படுவார் என்றும் பேசப்பட்டு வருகிறது.இதற்காக, டெல்லியில் நயினார் நாகேந்திரன் முகாமிட்டுள்ளார். அங்கு, பாஜக மூத்த தலைவர்களை ரகசியமாக சந்தித்து பேசி வருகிறார். இந்த சூழ்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று(10-ம் தேதி) சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு 10.15 மணிக்கு சென்னை வரும் அமித்ஷா,பின்னர்,கிண்டியில்உள்ளஐடிசிநட்சத்திரஓட்டலில்இரவுதங்குகிறார்.அப்போது, நட்சத்திர ஓட்டலில், அதிமுக பொதுச்செயலாளர்பழனிசாமி,டிடிவிதினகரன்,ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. பின்னர், அடுத்தநாள், பாஜக தலைவர்களை சந்தித்து, மாநில தலைவர் நியமனம் மற்றும் கூட்டணி குறித்து அமித் ஷா ஆலோசனைamit shah chennai visit சென்னைக்கு அமித் ஷா வருகை நடத்துகிறார்.இதையடுத்து, தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தை குமரி அனந்தனின் மறைவையொட்டி சாலிகிராமத்தில் உள்ள தமிழிசையின் வீட்டுக்கு நேரில் சென்று, அவருக்கு அமித் ஷா ஆறுதல் கூற இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பு அனைத்தும் முடிவடைந்த பிறகு நாளை(11-ம் தேதி) மாலை 6 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மீண்டும் அமித் ஷா டெல்லி புறப்பட்டு செல்கிறார்.பாஜகவின் அடுத்த மாநில தலைவர் யார் ? அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்குமா? என்ற பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வருகை தந்து, கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க இருப்பது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close