இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கை அமைச்சர்தாக்கல்……
2026 -27 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கையை தமிழக வேளாண் துறை அமைச்சர் பேரவையில் தாக்கல் செய்துவருகிறார் .தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026 – 27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு(பிப்.17)தாக்கல்செய்துஉரையாற்றினார்.காலை 9.30 மணிக்கு தனது உரையைத் தொடங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு, பல்வேறு துறைகள் மீதான சாதனைகள், அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் 2 மணி நேரம் 22 நிமிடங்கள் உரையாற்றினார்.இதையடுத்து 2026 -27 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கையை தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றிவருகிறார் வேளாண் துறையில் கடந்த 5 ஆண்டுகளில் அரசு மேற்கொண்ட திட்டங்களையும் வேளாண் மக்கள் பெற்ற பயன்களையும் விளக்கி வருகிறார்.தமிழக அரசு செயல்படுத்தி வரும் உங்களுடன்ஸ்டாலின்திட்டத்தின்கீழ்மாநிலம்முழுவதும்10ஆயிரம்முகாம்கள்நடத்தப்பட்டு,38.48லட்சம்மனுக்களுக்குதீா்வுஇறுதிசெய்யப்பட்டுள்ளனஎனதெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து நிதிநிலைஅறிக்கையில்கூறியிருப்பதாவது:பொதுமக்கள் அனைவரும் அரசு நிா்வாகத்தை எளிதாகஅணுக,பொதுமக்களுக்கானகுறைதீா்வுஅமைப்பாகச்செயல்படக்கூடிய முதல்வரின் முகவரித் துறை இந்த அரசு பொறுப்பேற்றவுடன் ஏற்படுத்தியது. மக்களுடன் முதல்வா் என்ற சிறப்புத் திட்டத்தின் மூலம் மக்களின் குறைகளுக்கு உடனுக்குடன் தீா்வு ஏற்படுத்த மாநிலம் முழுவதும்4,835முகாம்கள்நடத்தப்பட்டு23.50லட்சம்மனுக்களுக்குத்தீா்வுகாணப்பட்டன.இத்திட்டத்தின் பெரும் வெற்றியைத் தொடா்ந்து, இந்தச் சேவையினை மேலும் வலுப்படுத்தி அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி அவா்களுக்கு சேவைகளை வழங்கும் நோக்கில் இந்த அரசு உங்களுடன் ஸ்டாலின் என்ற புதியதிட்டத்தைத்தொடங்கியது. . இத்திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகா்ப்புற, கிராமப்புற பகுதிகளில் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் 38.53 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு 38.48 லட்சம் மனுக்களுக்கு இன்றுவரை தீா்வு இறுதி செய்யப்பட்டுள்ளன என அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.