ஆவடி காவல் ஆணைரயகத்தில் சுமார் 780 கிலோ கஞ்சா எரிப்பு……!


ஆவடி மாநகர காவல் ஆணையாளர் கி.சங்கர் உத்தரவின் படி ஆவடி மாநகர் காவல் கூடுதல் ஆணையாளர் பவானீஸ்வரி, ஆவடி காவல் மாவட்ட காவல் துணை ஆணையாளர் பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் தடய அறிவியல் துணை இயக்குனர் ஷோபியா ஜோசப் ஆகியோர்கள் கொண்ட போதை பொருள் அழிப்பதற்கான குழு அமைக்கப்பட்டுசெயல்பட்டுவருகின்றது.கஞ்சாவினை அழிக்க அரசால் அனுமதி பெற்ற செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கம் என்ற இடத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் தனி இயந்திரம் மூலம் எரித்து அழிக்கப்பட்டது.தடய அறிவியல் ஆய்வாளர் மோகன் மற்றும் ஆவடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் உதவி ஆணையாளர் பொன்சங்கர், காவல் ஆய்வாளர்கள் ரமேஷ், சசிக்குமார் மற்றும் காவலர்கள் ஆகியோர்கள் முன்னிலையில்இவை அழிக்கப்பட்டது.2024ம் ஆண்டுமுதல் இதுவரை 112 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் ரூபாய் 40 இலட்சம் மதிப்புள்ள 399 கிலோ கஞ்சா மற்றும் 2025 ஆண்டு 264வழக்குகளில்கைப்பற்றப்பட்டசுமார்ஒருகோடியேஎழுபத்திஏழுஇலட்சம்மதிப்புள்ள1776 கிலோகஞ்சாஎரித்துஅழிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து போதையில்லா தமிழ்நாடு என்ற கோட்பாட்டை வலியுறுத்தி அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதை பொருள்கள் சம்மந்தமாக தீவிர சோதனை செய்யப்பட்டு வருகின்றது.