fbpx
Others

ஆற்காட்டில் போதைப் பொருட்கள் விற்பனை–கையூட்டு பெரும் போலீசார்…

ஆற்காட்டில் போதைப் பொருட்கள் விற்பனை ஆசாமிகளால் தொடரும் கொலை, கொள்ளை சம்பவங்கள்      கையூட்டு பெரும் போலீசார்
கொந்தளிக்கும் பாமகவினர்

ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் ஆற்காடு நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நேற்றைய முன்தினம் 16.11.24 போதை காட்டிய பாதையில் இளைஞர் சமுதாயம், கண்டுகொள்ளாத தமிழக அரசு, ஆற்காட்டில் தொடர் கொலை, கொள்ளையென தலைவிரித்தாடும் அவல நிலையை சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுக்க தவறிய காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தனர்.அறிவித்தபடியே ஆர்ப்பாட்டம் சுமார் மாலை 5:50 மணிக்கு தொடங்கியது தொடக்க நிலையிலேயே ஆற்காடு நகர போலீசார் உங்களுக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான அனுமதி வழங்கவில்லையென்று வாக்குவாதம் செய்து ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்தி கைது செய்ய முயற்சித்தனர் போலீசாருடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு பாமகவினர் கலைந்து சென்றனர்.அதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர் நல்லூர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அவர் பேசிய போது தமிழகம் முழுவதும் போதை பொருட்கள் விற்பனை அதிகமாகி வருகிறது.அதனைத் தொடர்ந்து ஆற்காடு நகரத்தில் நகர காவல் ஆய்வாளர், துணை ஆய்வாளர் அனைத்து போலீசாருக்கும் தெரிந்து தான் போதைப் பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது கையூட்டு வாங்குகிறார்கள், போலீஸ் தரப்பில் நகரம் முழுவதும் சிசிடிவி கேமரா வைக்கப்படவில்லை, இரவு ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை, போதைப் பொருள் விற்பவர்களுக்கு இவர்களே எச்சரிப்பு கொடுத்து பாதுகாத்து வருகின்றனர் , ஆற்காடு நகரத்தில் நடைபெறும் அத்தனை கொலை, கொள்ளை சம்பவங்களுக்கும் போலீசாரே காரணமாக இருக்கின்றனர் நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்து இவர்களின் வண்டவாளங்களை பேசினால் தமிழக அரசுக்கும் எஸ் பி, டி எஸ்பி, ,ஐ ஜி ..டி ஐ ஜி போன்றமேலதிகாரிகளுக்கும்தெரிந்துவிடும் என்பதற்காக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டால் ஆற்காடு நகர போலீசார் டிஎஸ்பிிடம் போங்கள் என்றார்,டிஎஸ்பி அலுவலகத்தில் கேட்டால் லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் அனுமதி அளித்தாலே போதுமானது என்கிறார்கள், மறுபடியும் ஆய்வாளர் பார்த்தசாரதியிடம் கேட்டால் எஸ் பி அலுவலகத்துக்கு சென்று அனுமதி வாங்கிக் கொள்ளுங்கள் என்கிறார் நான்கு நாட்களாக அலைய விட்டனர். எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று போலீஸ் தரப்பில் முறையாக கடிதம் வழங்கவில்லை போலீசார் யார், யாரிடம் எவ்வளவு? வாங்குகிறார்கள் கஞ்சா, போதை மாத்திரை விற்பனை செய்யும் நபர்கள் யார்? யார்? எவ்வளவு?கொடுக்கிறார்கள் அனைத்திற்கும் எங்களால் ஆதாரம் கொடுக்க முடியும் என்றார் அதனால்தான் எங்களை அச்சுறுத்துகிறார்கள்.இந்தியாவின் மூன்றாவது ஜனநாயகத் தூணான காவல்துறை போதை ஆசாமிகளிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு இரவு ரோந்து பணிக்கு செல்லாமல்ஆசாமிகள் செய்யும் செயல்களுக்கு துணை நின்று அமைதி காக்கின்றனர் கஞ்சா,போதை மாத்திரை விற்பவர்கள் தான் ஆற்காட்டில் அடுத்தடுத்து மூன்று கொலைகளுக்கு காரணமாக இருக்கின்றனர் காவல்துறையினர் செயலற்ற நிலையில் உள்ளனர் இவர்களின் வேலை என்ன? பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிப்பதுதானே! போலீசார் அந்த வேலையை ஒழுங்காக செய்யவில்லை மக்களுக்காக போராடிய ஜனநாயகவாதிகளான பாமக நிர்வாகிகளை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்திய காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்.காவல்துறை ஒழுங்காக செயல்பட்டால் நாங்கள் ஏன்? போராட வேண்டிய அவசியம் ஏற்படப் போகிறது அவர்கள் எங்களிடம் நேரடியாக பேசினால் எந்தெந்த போலீஸ் யார்? யாரிடம்? தொடர்பு வைத்திருக்கிறார்கள் எவ்வளவு? வாங்குகிறார்கள் என்று லிஸ்ட் போட்டு சொல்ல முடியும் போலீசாரின் வண்டவாளம் தெரிந்துவிடும் அதனால் தான் எங்களிடம் பூச்சாண்டி வேலை காட்டுகிறார்கள் ஆற்காடு மக்களின் நல்வாழ்வுக்காக காவல்துறை கொடுத்த அவமானத்தை நாங்கள் தாங்கிக் கொள்கிறோம்.சமீபத்தில் ஆற்காடு ஹவுசிங் போர்டில் நடந்த சம்பவத்தை சுட்டிக்காட்டு விரும்புகிறேன் திருமணமான நபர் ஒருவர் தன் மனைவியை விட்டு வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார்.,இதனை அறிந்த குடிகாரர்கள் வீட்டுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்திருக்கிறார்கள் அந்தப் பெண்ணை ரேப் மட்டும் பண்ணவில்லை இது காவல்துறைக்கு தெரியாதா? குடும்பப் பெண்கள்மானத்தைபார்ப்பார்களா? நடுவீதியில் வந்து போராடுவார்களா? அதற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம் நாங்கள் போராட்டம்நடத்தஅனுமதிகொடுக்காமல்தடுத்துபோதைபொருட்கள்விற்பனைசெய்பவர்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு எடுபுடி வேலை பார்க்கின்றனர் ஒரு போலீஸ்காரர் கேட்கிறார் இரவில் ரோந்து போக முடியாது,வண்டிக்கு பெட்ரோல், டீசலுக்கு காசு யார்? கொடுப்பா? கஞ்சா,அபின், பீடா, லாட்டரி ஓடக்கூடாது என்றால் காசு எப்படி? வரும் என்று கேள்வி? எழுப்புகிறார்.,அப்படியானால் காவல்துறைக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எதுக்கு, போலீஸ் வேலையை விட்டுட்டு வாங்க நாங்கள் உங்களுக்கு வேலை தருகிறோம் பாமக பொறுப்பாளர்கள் அனைவரும் சேர்ந்துஎஸ்பிவிடும் முறையிட போகிறோம் ஆற்காடு காவல் நிலையத்தில் உள்ள அனைவரையும் பணிவிடை மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப் போகிறோம் நடவடிக்கை இல்லையென்றால்மருத்துவர் அய்யாவின் ஒப்புதலோடு ஆயிரம் பேர் ஒன்றிணைந்து காவல் நிலையத்தை முற்றுகையியிட்டு பூட்டு போடும் போராட்டத்தை நடத்துவோம்.எங்களை எத்தனை பேர் கைது செய்தாலும் பரவாயில்லை நாங்கள் போராடுவது மக்களுக்காக தான் அது நடக்காமல் இருப்பதற்காக தான் காவல்துறை நண்பர்களை அறிவுறுத்துகிறோம் காவல்துறையினர் மக்களை பாதுகாக்கும் பணியில் கண்ணியமான ஜனநாயக முறையில் செயல்படவில்லை ஒருவர் கூட சரியில்லை உங்களுடைய தவறுகளை திருத்திக் கொண்டு கண்ணியமான முறையில் செயல்படுமாறு கேட்டுக் கொள்வதாக கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close