Others
ஆற்காடு 5வது வார்டில் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்..

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு 5 வது வார்டு திமுக சார்பில் கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது
இந்நிகழ்விற்கு வட்டச் செயலாளரும் மாவட்ட பிரதிநிதியுமான ஆர்.கோபி தலைமை தாங்கி ஆற்காடு நகராட்சி அலுவலகம் அருகே அலங்கரிக்கப்பட்ட கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் அதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர் இதில் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் நித்தியானந்தன், சுபாஷ்கண்ணன், பிஏடிசி அமானுல்லா, முபாரக், சுரேந்தர்,ராஜாஆனந்த், பழனி, கருணாகரன் உள்ளிட்ட கழகத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்