fbpx
Others

ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் – தெலுங்குதேசம் கட்சியினர் மோதல்..

தேர்தல் நடைபெறும் ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் – தெலுங்குதேசம் கட்சியினர் மோதல், கலவரம் நடத்தி வருகின்றனர். மக்களவைத் தேர்தலை பொறுத்தவரையில் ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளுக்கும், தெலங்கானாவின் 17 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இது தவிர ஒடிசா – 4, பிகார் – 5, ஜார்க்கண்ட் – 4, மத்திய பிரதேசம் – 8, மகாராஷ்டிரா – 11, உத்தர பிரதேசம் – 13, மேற்கு வங்கம் – 8, ஜம்மு காஷ்மீர் – 1 ஆகிய மக்களவை தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. மேலும் ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலும் இன்று ஒரே கட்டமாக 175 தொகுதிகளில் நடைபெறுகிறது. மேலும் ஒடிசாமாநிலத்திலும்சட்டமன்றதேர்தலின்முதற்கட்டம்இன்றுநடைபெற்றது.இந்நிலையில், தேர்தல் நடைபெறும் ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் – தெலுங்குதேசம் கட்சியினர் மோதல், கலவரம் நடத்தி வருகின்றனர். கார்கள் மற்றும் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். ரப்பர் குண்டை பயன்படுத்தி கலவரக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். தடியடியும் நடத்தப்பட்ட நிலையில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நரசராவ்பேட்டையில் நடந்த மோதலில் குண்டூர் ஆளுங்கட்சி எம்எல்ஏ கோபிரெட்டி ஸ்ரீனிவாஸ் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். கற்கள், கட்டைகளை வீசி தாக்குதல் நடத்திய தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை போலீசார் விரட்டியடித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close