fbpx
Others

ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி மாணவிகள்கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பு….

ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவிகள், கிராமப்புற வேளாண்மைப் பயிற்சியைத் தொடங்குவதற்காக திமிரி பகுதியில் முகாமிட்டுள்ளனர். இன்று 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு கனியனூர் திமிரி ஊராட்சி ஒன்றியத்தில் கிராம சபை இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதில் கலந்துகொண்ட வேளாண்மை மாணவிகள் இயற்கை விவசாயத்தில் இத்தயாரிப்புகள் பயிர் வளர்ச்சி,மண் உயிரியல் செயற்பாடு, சத்துத் திறன் மேம்பாடு மற்றும் ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைப்பதில் வகிக்கும் பங்கு குறித்து எடுத்துரைக்கப்பட்டது மற்றும் பல்வேறு உயிா சத்து உரங்களின் முக்கியத்துவம், இவற்றை தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்கள், தயாரிப்பு முறை பயன்பாட்டு விதங்கள் ஆகியவற்றை நான்காம் ஆண்டு வேளாண் மாணவிகள் தெளிவாக விளக்கினர். மேலும் மாணவிகள் தங்கள் பகுதியில் உள்ள விவசாயிகளிடம் இதைப்பற்றி தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. (RAWE) மாணவா களின் கேள்விகள் மற்றும் கலந்துரையாடல்களுடன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.

 

Related Articles

Back to top button
Close
Close