fbpx
Others

ஆணவக் கொலையை தடுக்க தனிச் சட்டம்..

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கூட்டணிfeatured-img கட்சி தலைவர்களான திருமாவளவன், பெ.சண்முகம், முத்தரசன் ஆகியோர் திடீரென சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, ஆணவக் கொலையைத் தடுக்கதனிச்சட்டம்இயற்றகோரிவலியுறுத்தியதாகதகவல்வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. தமிழக அரசியலை பொறுத்தவரை திமுக கூட்டணி வலுவாக அமைந்துள்ளது. தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரப்படுத்தி வரும் நிலையில், திமுக கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது.அதன்படி இன்று காலை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சண்முகம் ஆகிய மூவரும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு ஆகியோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தேர்தலை எதிர்கொள்வது, தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close