அமித் ஷா–பாஜக கட்சியின் மாற்றுத் திட்டம் …
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பலம் வாய்ந்த திமுகவை வீழ்த்த பாஜகவும் அதிமுகவும் கூட்டணியை பலப்படுத்த வேண்டும் என முயற்சித்து வருகின்றன. தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறது.இது ஒருபுறம் இருக்க தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயை அதிமுக கூட்டணிக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிச்சாமியின் விருப்பம். கடந்த சில தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை பார்த்து கூட்டணிக்கான அச்சாரம் போடப்பட்டுவிட்டது என உற்சாகமாக பேசினார் எடப்பாடி.ஆனால் பாஜக இருக்கும் அணியில் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என தமிழக வெற்றி கழகம் தெளிவாக சொல்லிவிட்டது. இந்த நிலையில் விஜய் கூட்டணிக்கு வராவிட்டால் அமித்ஷா கையில் மாற்றுத்திட்டங்களும் இருப்பதாக
சொல்லப்படுகிறது. அதாவது தமிழகத்தில் சரியான கூட்டணியும் தேர்தல் மேலாண்மையும் இருந்தால் பாஜக 20 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறமுடியும்எனசொல்லப்பட்டு இருக்கிறது. அதாவது கடந்த மக்களவைத் தேர்தல்நடைபெற்ற போது பல தொகுதிகளில் அதிமுகவை விட பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலைபெற்றது.மேலும்சிலதொகுதிகளில் திமுகவை விட அதிக வாக்குகள் பாஜக கூட்டணிக்கு கிடைத்தது. இதை அடுத்து அதை மனதில் கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தலில் அந்த தொகுதிகளில் கவனம் செலுத்த பாஜக தலைமை முடிவு எடுத்திருக்கிறது. மேலும் இதுவரை தமிழகத்தில் ஆர்எஸ்எஸின் பங்கு இல்லாத நிலையில் இந்த தேர்தலில் அதனையும் துணைக்கு அழைத்துக் கொள்ள பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. மேலும் பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட ஆன்மீக தலங்கள் இருக்கும் தொகுதிகளில் பாஜக கூடுதல் கவனத்தை செலுத்த இருக்கிறது.அதே நேரத்தில், அமித் ஷா தமிழகத்தில் பெரிய கூட்டணியை உருவாக்கும் முனைப்பில் உள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஏ.சி. சண்முகம், ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமிஉள்ளிட்டோருடன், விஜயுடன் சந்திப்புகள் நடைபெற வாய்ப்பு அதிகம்என்கின்றனர்பாஜகவினர்.இதில்மிகமுக்கியமானது,தவெகவைகூட்டணிக்குள் ஈர்ப்பதற்கானமுயற்சி.விஜய்தலைமையில்தவெகதனியாகப்போட்டியிட்டால், திமுக மற்றும் காங்கிரஸ் சார்ந்த சிறுபான்மை வாக்குகளில் பிளவு ஏற்பட்டு அவர்களுக்கு பாதகமாக மாறும் என பாஜக நினைக்கிறது. குறிப்பாக மைனாரிட்டி வாக்குகள் பிளவு அடைந்தால், திமுக கூட்டணிக்கு நேரடியான பாதிப்பு ஏற்படும் என்பதால், தவெக தனித்து போட்டியிடுவதைக் கூட பாஜக ஒரு தந்திரமாகவே பார்க்கிறது.தவெக கூட்டணிக்கு வரவில்லை என்றால், அதற்கு மாற்று “B-Plan” ஏற்கனவே தயார் நிலையில் வைத்திருக்கிறது என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் தலைமையில் வேறு சில கூட்டணியில் சேர்ந்துவிட்டால், அது மற்ற கட்சிகளின் வாக்குகளை திசைதிருப்பும் ஆற்றல் கொண்டது என்பதால், தவெக மிகப்பெரிய கூட்டணி யை உருவாக்குவதை தடுப்பதில் பாஜக அதிக கவனம் செலுத்துகிறது.இதே நேரத்தில் பாஜக அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் இடையே பனிப்போர் நீடிப்பதையும் கவனிக்க வேண்டும். தலைமை மாற்றப்பட்டதிலிருந்து ஏற்பட்ட இந்த கோல்ட் வார் நிலையை அமித்ஷா சீரமைக்க முயற்சி செய்து வருகிறார். அதிமுக தரப்பிலும் அதிரடி நகர்வுகள் நடந்து வருகின்றன. முக்கிய திமுக அமைச்சர்கள் குறித்து இருக்கும் புகார்கள், வழக்குகள் தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட பல “ஃபைல்ஸ்” எடப்பாடி பழனிசாமி மூலம் பாஜக தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது. அமைச்சர்கள் பல தொகுதிகளில் பொறுப்பில் இருக்கும் நிலையில், அவர்களை வழக்குகள் மூலம் அழுத்தத்தில் வைத்தால்,அவர்கள்தேர்தல்பணியில்முழுமையாகஈடுபடமுடியாதுஎன்பதேஅமித்ஷாவின் முக்கிய திட்டம் என்கின்றனர்.