fbpx
Others

அப்பல்லோவில் 2ஆவது நாளாக முதல்வர்மு.க.ஸ்டாலின்…

MK Stalin Chennai Apollo Hospital தனது எக்ஸ் தளத்தில், “மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன். #உங்களுடன்ஸ்டாலின் முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா, நேற்றுவரையில் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை – தீர்வுகாணப்பட்டவை எத்தனை உள்ளிட்ட விவரங்களைத் தலைமைச் செயலாளரிடம் கேட்டறிந்து, மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண்பதில் எந்தவிதமான தொய்வும் ஏற்படக் கூடாது என அறிவுறுத்தியுள்ளேன்” இவ்வாறுஅவர்தெரிவித்துள்ளார்.முதல்வர்மு.க.ஸ்டாலின்நேற்றுகாலைநடைபயிற்சிமேற்கொண்டபோது, அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அதனை சமாளித்துக் கொண்ட முதல்வர், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா. திமுகவில் இணையும் நிகழ்வில் பங்கேற்றார்.இந்நிலையில், தலைசுற்றல் தொடர்ந்து இருந்து வந்ததால், சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ளஅப்போலோமருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.மு.க.ஸ்டாலின்உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகனும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா, மகள்mk stalin apollo tamil nadu செந்தாமரை, மருமகன் சபரீசன், பேரன் இன்ப நிதி உள்ளிட்ட குடும்பத்தினர் விரைந்து வந்தனர். தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், எ.வ. வேலு, மா. சுப்பிரமணியன், மா.சுப்பிரமணியன் உள்பட அமைச்சர்களும், நிர்வாகிகளும் வருகை தந்தனர். அப்பல்லோமருத்துவமனையில்லேசானதலைசுற்றல்காரணமாக   முதல்வர்ஸ்டாலின்அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.முதல்வரின் உடல் நிலையைப் பரிசோதனை செய்து தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். அதோடு, முதல்வரின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், அவர் மூன்று நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதுஇதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்..நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தொலைபேசி மூலம் முதலமைச்சரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் முதலமைச்சர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகத் தெரிவித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close