அண்ணாமலை-மக்களின் சொந்த வீடு கனவைத் தகர்த்த திமுக
வீட்டு வரைபட கட்டட அனுமதி கட்டணத்தை திமுக அரசாங்கம் உயர்த்தியதால் பொதுமக்களின் சொந்த வீட்டுக் கனவு தகர்க்கப்பட்டுள்ளது என்று தமிழக பாரதிய ஜனதாகட்சித்தலைவர்அண்ணாமலை சாடியிருக்கிறார்.“ஆட்சிக்கு வந்ததில் இருந்து, சொத்து வரி, பதிவுக் கட்டணம், கட்டுமானப் பொருள்கள் விலைஎனஅனைத்தையும் உயர்த்தி,பொதுமக்களின் சொந்த வீடு கனவைத் தகர்த்த திமுக அரசு, தற்போது, வீட்டு வரைபட அனுமதிக் கட்டணத்தையும் இரண்டு மடங்குக்கும் மேல் உயர்த்தி அதிர்ச்சி அளித்திருக்கிறது. சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என அனைத்துப் பகுதிகளிலும், இந்த சுயசான்று அடிப்படையிலானவரைபடஅனுமதிக்கட்டணம்இரண்டுமடங்குக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது,” என்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.“வீட்டு வரைபட அனுமதிவழங்குவதைஎளிதாக்குவோம் என்று வாக்குறுதி வழங்கிய திமுக, சென்னையில், 1,000 சதுர அடி இடத்துக்கு, அனுமதி வழங்க சுமார் ரூ.40,000 ஆக இருந்த கட்டணத்தை, ரூ.1,00,000 ஆக ஆக்கியிருப்பதுதான் எளிமையாக்குவதா? ஏற்கெனவே, குறித்த நேரத்தில், காலதாமதமின்றி வரைபட அனுமதி பெறப் பல தரப்பினருக்கும் கமிஷன் கொடுக்கும்நிலைஇருப்பதாகத்தெரிகிறது.இந்தநிலையில்,சுயசான்றுஅடிப்படைஎன்றுகூறிலஞ்சஊழலைஅதிகாரபூர்வமாக்கியிருக்கிறது திமுக என்பதுதான் உண்மை.“பொதுமக்கள் சுயசான்று அளித்து, வரைபட அனுமதி பெற, அதிகக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது என்ன விதமான நடைமுறை? அதிகக் கட்டணம் செலுத்தினால், கட்டட வரைபடம் சரிபார்த்தல், கட்டடம் கட்டப்படும் இடத்தை நேரில் சென்று பார்வையிடல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளாமல் உடனேயே அனுமதி வழங்குவோம் என்றோ அல்லது, குறைந்த கட்டணம் செலுத்தினால்அனுமதிவழங்கத்தாமதமாக்குவோம்என்றோகூறுகிறதாதிமுக அரசு,”என்றும்அவர்கேள்வியெழுப்பியுள்ளார்.“பொது மக்கள் எதிர்பார்த்தது, சிக்கலற்ற நடைமுறைகள் மூலம், காலதாமதமின்றி வரைபட அனுமதி வழங்குவதையே தவிர, இரண்டு மடங்குஅதிகக்கட்டணத்தை அல்ல. உடனடியாக, சுயசான்று அடிப்படையில் வரைபட அனுமதி வழங்குவதற்கான பகல் கொள்ளை கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், வழக்கமான கட்டணத்தையே சுயசான்று அடிப்படையிலான அனுமதிக்கும் வசூலிக்கவேண்டும்,”எனதிமுகஅரசைஅண்ணாமலைவலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே பா.ம.க. நிறுவனர்டாக்டர் ராமதாசும் கட்டண உயர்வை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று கூறி வீடு கட்டுவதற்கான கட்டட வரைபட அனுமதி கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
