fbpx
Others

அண்ணாதுரை ‘திராவிட நாடு’ கேட்டபோதுஅவரைபிரிவினைவாதி என விமர்சித்தனர்…..

‘திராவிட நாடு’ கேட்டபோது அண்ணாதுரையைப் பிரிவினைவாதி என விமர்சித்தஅண்ணா இன்றைய சூழலில் என்னவாக தேவைப்படுகிறார்? - Madras Review அரசியல்வாதிகள்,அதைக்கைவிடுவதாகஅறிவித்தபோது கேலி செய்தனர். புதியதாகக் கொண்டுவரப்பட்டுள்ள பிரிவினை தடுப்புச் சட்டத்திற்குப் பயந்துவிட்டார் அண்ணாதுரை என்றனர். திமுகவின் இந்தத்திடீர்கொள்கை மாற்றம் அந்நாளில் இந்திய முழுவதும் பேசு பொருளாக மாறியது.பிரிவினைக் கொள்கையைத் திரும்பப் பெற்றதற்காக அண்ணாவை முதல்வர் பக்தவத்சலம் பாராட்டினார். அதற்கு ‘திமுகவின் கொள்கை மாற்றத்தைப் படித்தமுதலமைச்சர்பாராட்டியது சரியே’ என்றார் ராஜாஜி. மேற்கொண்டு, “திராவிட முன்னேற்றக் கழகம் பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டது.இது வரவேற்க வேண்டிய விஷயம்தானே? ஏன் கேலி செய்ய வேண்டும்? பிரிவினைத் தடைச் சட்டம் எதற்காகக் கொண்டுவரப்பட்டது? பிரிவினைக் கொள்கையைக் கைவிட வேண்டும் என்பதற்காகத்தானே? சட்டத்தையும் கொண்டு வரவேண்டும், ஆனால் திமுக பிரிவினையை விடக்கூடாது என்று நினைப்பது கெட்ட எண்ணம். அக்கட்சியை ஒடுக்க வேண்டும்? தலைவர்களை ஜெயிலில் ஒட்டு, கட்சியை நிர்மூலமாக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தைத்தான் குறிக்கிறது. சட்டம் படித்தவர், சட்ட பரீட்சையில் தேறி பட்டம் பெற்றவர் பக்தவத்சலம். அவர் பாராட்டியது சரி” என்றார் ராஜாஜி. திமுகவின் முடிவை ஆந்திர முதல்வர் சஞ்சீவி ரெட்டி வரவேற்றிருக்கிறார்.ஒரு பக்கம் திமுக ‘திராவிட நாடு’ கொள்கையைக் கைவிட்டது. மற்றொரு பக்கம் முதல்வர் பதவியை காமராஜ் கைவிட்டார். இவரது முடிவைப் பற்றி சுதந்திராக் கட்சித் தலைவர் ராஜாஜி ஒரு அறிக்கையை வெளியிட்டார். “பொதுஜன நலனுக்காக முதல்வர் பதவியைக் கைவிட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. வேலையிலிருந்து அதை நன்றாகச் செய்யவேண்டுமே ஒழிய விடுவது தவறு.மறைந்த சர்தார் வல்லபாய் படேலின் 88வது பிறந்தநாள் விழா ஜார்ஜ் டவுன் செயின்ட் மேரிஸ் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் ராஜாஜி இந்தக் கருத்தைத் தெரிவித்தார். “எதிர்க்கட்சி இல்லாமல் நல்லாட்சி ஏற்படாது. எதிர்க் கட்சி இருந்தால்தான் ஆளும் கட்சியின் அதிகார மமதை, போதை நீங்கி பயம் ஏற்படும். அனுமான் இலங்கைக்குப் போன பின்புதான் ராவணனுக்கும் நல்ல புத்தி ஏற்படலாயிற்று. ராட்சஸ உலகத்துக்கும் ஓரளவு பயம் ஏற்பட்டது.தற்போது தேர்தல்களில் ஜெயிக்கும் கட்சி எது என்று பார்த்து மக்கள் ஓட்டுப் போடுகின்றனர். ஜெயிக்கும் கட்சிக்கு ஓட்டுப்போடுவது கோழைத்தனம். தோற்கின்ற கட்சிக்குத்தான் மக்கள் ஆதரவு வேண்டும். சரிசமமான எதிர்க்கட்சி ஏற்படாவிடில் நல்லாட்சி ஒருபோதும் ஏற்படாது” என ராஜாஜி கூறிய கருத்துகளை ‘சுதேசமித்திரன்’ (1நவம்பர், 1963) வெளியிட்டது. திமுக பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டதை சர்வோதயா கட்சித் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் வரவேற்று வாரணாசியிலிருந்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அவர், இனிமேல் சமூக- பொருளாதார நீதியைக் கோரி திமுக செயல்பட வேண்டும் என்றும் பிராமண சமுதாய எதிர்ப்பு போக்கைக் கைவிட்டு வகுப்பு வேற்றுமையற்ற சமுதாயத்தை அமைக்க ஆக்கப்பூர்வமான முறையில் திமுக ஈடுபடும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார். பிரிவினைக் கொள்கையை அறவே கைவிட்டுவிட்டதாக சி.என். அண்ணாதுரை அறிவித்ததைத் தொடர்ந்து கட்சியின் எதிர்காலம் குறித்தும் புதிய சட்ட திட்டங்களை உருவாக்குவதற்காகவும் நவம்பர் 2 மற்றும் 3 ஆம்தேதி உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் எனத் தலைமை அறிவித்தது. அதில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கழக முன்னணி தலைவர்கள் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அண்ணாதுரை எடுத்துள்ள முடிவை எதிர்த்து தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர் ஈ.வெ.கி.சம்பத், “பிரிவினைத் தடைச் சட்டம் வந்ததால் ‘திராவிட நாடு’ கோரிக்கை கைவிட்டேன் என அண்ணா கூறியிருப்பது தமிழ்நாட்டுக்கே அவமானம்” என அறிக்கைவிட்டிருந்தார்.அவருடன் சேர்ந்து கண்ணதாசன், “கழகம் என்பது உடல், பிரிவினைக் கோரிக்கை என்பது உயிர் என்று பேசியவர்கள் தற்போது உடலைக் காப்பாற்ற உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலை எங்கும் காணப்படாத அதிசயம். கடந்த தேர்தலில் திமுகவுக்குக் கிடைத்த வாக்குகள் பிரிவினைக்குக் கிடைத்த வாக்குகள் என்றால், பிரிவினையைக் கைவிட்டவர்கள் தங்களின் சட்டசபை உறுப்பினர் பதவிகளை ராஜிநாமா செய்வதுதான் நியாயம்” என்றார். திமுக பிரிவினையைக் கைவிட்டதால் அக்கட்சி மீது விமர்சன மழை பெய்தது. காமராஜ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால் அவர் மீதும் விமர்சனம் குவிந்தது. நாட்டைக் காப்பாற்றுவதற்காக மக்கள் அவரை அரியணையில் அமர்த்தினால், அவர் மக்களைவிடக் கட்சியே முக்கியம் எனப் போய்விட்டார் என பிரஜா சோஷலிஸ்டு கட்சித் தலைவர் காமத் கண்டித்தார்.காமராஜின் ‘கே பிளான்’ பல மாநிலங்களை ஆண்டுகொண்டிருந்த காங்கிரஸ் ஆட்சிக்குள் நிர்வாக சீர்கேட்டை உண்டாக்கியது. இன்னும் சொல்லப் போனால் சில மாதங்கள் வரை நாட்டில் அரசு நிர்வாகம் முடிவு எடுக்க முடியாமல் முடங்கிக் கிடந்தது. “பதவியைவிடக் கட்சியே முக்கியமானது என்பதற்காகக் கொண்டுவரப்பட்ட இத்திட்டம் நடைமுறையில் நாட்டைவிடக் கட்சிக்கு முக்கியத்துவம் அளித்ததோடு நில்லாமல், ஒரு தனிப்பட்ட மனிதனே கட்சியைவிட முக்கியமென்ற நிலைக்கு மாறிவிட்டது. சில மாநிலங்களில் திடீரென்று செய்யப்பட்ட மாற்றம் காரணமாகச் சீர்கெட்டுள்ள நிர்வாகம் மேலும் மோசமடையும். காமராஜ் கொண்டுவந்த திட்டமானது இப்போது நேரு திட்டமாக மாறிவிட்டது” என அவர் கண்டித்திருந்தார். ஒரு பக்கம் அண்ணாதுரை தன் பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டதால் கட்சிக்கு புதிய வண்ணம் பூசி தீவிரமாக ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். எதிர் வரிசையிலிருந்த தமிழ்த் தேசியக் கட்சியைக் கலைத்துவிட்டு, ஈ.வெ.ராமசாமியுடன் சம்பத் இணையப் போகிறார் என்ற பேச்சு வேகமாகப் பரவிவந்தது……

Related Articles

Back to top button
Close
Close