fbpx
Others

அண்ணா பல்கலை பாலியல் குற்றவாளிஞானசேகரனுக்கு ஐந்தே மாதத்தில் தீர்ப்பு….

Gnanasekaran case: ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்பதை ஏற்கிறது நீதிமன்றம்: தீர்ப்பில் முக்கிய தகவல்! | Anna University Case: 207-Page Judgment Confirms Gnanasekaran Used Sir to Trap ...அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின் தீர்ப்பை வரவேற்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X தள பதிவில் முதலமைச்சர் தெரிவித்ததாவது; பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்குச் செயலால் பதில் அளித்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை! விசாரணையின் போது, உயர்நீதிமன்றமே பாராட்டிய வகையில், சென்னை மாணவி வழக்கினை நியாயமாகவும் விரைவாகவும் ஐந்தே மாதத்தில் நடத்தி முடித்து, குற்றவாளிக்குக் கடும் தண்டனையைப் பெற்றுத் தந்திருக்கிறோம்.தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் இந்த வழக்கில் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாக மகளிர் நீதிமன்றமும் முன்வந்து பாராட்டி இருக்கிறது. இளம்பெண் ஒருவருக்கு நிகழ்ந்த அநீதியில் கூட அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சின்ன புத்தி கொண்ட சிலரின் எண்ணம் இதனால் தவிடுபொடியாகியுள்ளது. பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என அண்மையில் நாம் கொண்டு வந்த சட்டத்திருத்தத்துக்கு ஏற்ப, இவ்வழக்கில் remission உள்ளிட்ட எந்தச் சலுகையும் இல்லாமல் கடுங்காவல் தண்டனை விதித்துள்ள நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நன்றிகூறி வரவேற்கிறேன். என்று பதிவிட்டுள்ளார்.   அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதிப்பு.சிறையில் ஞானசேகரனுக்கு எந்த சலுகையும் வழங்கப்படக்கூடாது. மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்தார் நீதிபதி.

ஞானசேகரன் மீது நிரூபிக்கப்பட்ட 11 குற்றச்சாட்டு சட்டப்பிரிவுகளின் தண்டனை விவரம்:  329 – மாணவியிடம் விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடந்து கொள்ளுதல் – 3 ஆண்டுகள் சிறை    126(2) – மாணவியை செல்ல விடாமல் சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல் – ஒரு மாதம் சிறை.    87 – வலுக்கட்டாயமாக கடத்தி ஆசைக்கு இணங்க வைத்தல் – 10ஆண்டுகள், ரூ.10,000 அபராதம்.    127(2) – உடலில் காயத்தை ஏற்படுத்துதல் – 1 ஆண்டு சிறை.   75(2) – விருப்பத்துக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்தல் – 3 ஆண்டுகள்     76 76   76 –  கடுமையாக தாக்குதல் – 7 ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம்.    64(I) பாலியல்   வன்கொடுமை – 30 ஆண்டுகள் தண்டனை குறைப்புஇல்லாமல்ஆயுள்;ரூ.25,000அபராதம் .351(3)  கொலை மிரட்டல் விடுத்தல் – 7 ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம்.      238(B) பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்தல்; 3ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம்.   66(E) தகவல் சட்டப்பிரிவு: தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறுதல் – 3 ஆண்டுகள் சிறை, ரூ.25,000 அபராதம்….

Related Articles

Back to top button
Close
Close