அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர். கலை முதுமணி.ஆர். முருகக்கனி கண்டனம்.
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் சிலம்பம் முறையாக
நடத்தப்படவில்லை!அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர். கலை முதுமணி.ஆர். முருகக்கனி கண்டனம்!! தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி கடந்த 10ந்தேதி தொடங்கி தமிழ்நாடு முழுவதும் நடந்து வருகிறது.கடந்த ஆண்டு சிலம்பம் சேர்க்கப்பட்டு பல்வேறு குளறுபடிகள் நடந்து பல்வேறு மாவட்டங்களில் பிரச்சனைகள் உருவானது.
இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு கடிதம் மூலமாக தகவல் கொடுத்தோம் .இந்த முறை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சொல்லி இருந்தோம்.ஆனால் தற்போது எந்த ஏற்பாடும் முறையாக செய்யவில்லை குறிப்பாக கழிப்பறை, குடிநீர் வசதி, மாணவர்கள் வெயிலில் சுருண்டு விழுகின்ற அபாயம்.இதற்கான தீர்வு எதுவும் செய்யப்படவில்லை பல்வேறு மாவட்டங்களில் சிலம்பம் போட்டி நடத்தப்பட்டு பயிற்சியாளர்களுக்கும் ,பெற்றோர்களுக்கும் போட்டி நடத்துகின்ற மாவட்ட விளையாட்டு அலுவலருக்கும் சண்டை ,சச்சரவுகள் உருவாகி வருவதை தொலைக்காட்சி மூலமும் அங்கு இருக்கின்ற ஆசான்கள் மூலம்அறிகிறோம்.மேலும் கடந்த வருடம் சிலம்பம் 5 வகையான பிரிவுகளில் நடத்தப்பட்டது.இந்த முறை ஒரே பிரிவு தொடும் முறை அதுவும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான போட்டியில் 12 வயது முதல் 19 வயது வரை விளையாடுகின்ற மாணவர்கள் எடை பிரிவு சரியாக அறிவிக்கப்படவில்லை.திடீரென 10ந்தேதி அறிவிக்கப்பட்ட எடையை பிரிவில் தொடக்கமே 45 கிலோ தொடங்கி 55 கிலோ வரை ஆண்களுக்கும் பெண்களுக்கு 40 கிலோ தொடங்கி 50 கிலோ ஒரு பிரிவு 50 தொடங்கிய 60 ஒரு பிரிவு 60 தொடங்கிய 70 ஒரு பிரிவு 70 க்கு மேல் ஒரு பிரிவு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.12 வயது உள்ள மாணவர்கள் 40 கிலோ இருக்க வேண்டும் என்ற அரசின் தகவலுக்கு எங்கள் கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.12 வயது மாணவர்கள் 25 கிலோ 30 கிலோ அளவிலேயே இருக்கின்றபோது விளையாட முடியாத சூழ்நிலை உருவாகி பல்வேறு இடங்களில் பிரச்சனைகள் உருவாகி இருக்கிறது இவைகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முறையாக சிலம்ப ஆசான்கள் மூலமாக அறிந்து எடை பிரிவுகளை போட்டு இருக்கலாம்.1980 முதல் அங்கீகாரம் பெற்ற சிலம்பம் விதிமுறைப்படி எடை பிரிவுகள் அரசாங்கத்திற்கு தெரியும் .ஏன் இப்படி போட்டு சிலம்பத்தை பாழ்படுத்தி இருக்கிறார்கள். என்ற எண்ணம் பலருக்கு உருவாகி இருக்கிறது. முதல்வர் கோப்பை சிலம்பப் போட்டியில் தொடு முறை மட்டுமே வைப்பதற்கு யார் காரணம் திறமைசாலிகள் இதன் மூலமாக தோற்கடிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.இவைகளை முறைப்படுத்தி மற்ற விளையாட்டை விட சிலம்பத்திற்கு தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் தர வேண்டும்.குறிப்பாக விளையாட்டுத்துறை அமைச்சர். விரைவில் துணை முதல்வராக ஆகக்கூடிய உதயநிதி ஸ்டாலின் சிலம்பத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டும்.உலக அளவில், தேசிய அளவிலே பல்வேறு போட்டிகளை தமிழ்நாட்டிலே விளையாடுவதற்கு வாய்ப்பு அளித்து விளையாட்டு துறையில் முன்னணி மாநிலமாக உருவாக்கி வருகின்றது மிகவும் மகிழ்ச்சியானசெய்தி.
ஆனால் 2019ல் கேலோ இந்தியாவில் சேர்க்கப்பட்ட சிலம்பம் இதுவரை போட்டியாக நடத்தப்படவில்லை 2023 இந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் நடந்த கேலோ இந்தியா போட்டியில் சிலம்பம் காட்சிமுறைபோட்டியா த்தான் நடத்தப்பட்டது.அதேபோல தேசிய பள்ளி விளையாட்டுசம்மேளனம்எஸ்.ஜி.எப்.ஐ.போட்டியில் சிலம்பம்நீக்கம் செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்துகின்ற சிலம்பாட்ட போட்டி குறு வட்டம், வட்டம், மாவட்டம், மாநிலம் என்று நடத்தப்படவில்லைநேரடியாக மாவட்ட அளவில் சிலம்பம் போட்டி விரைவில் நடக்க இருக்கிறது.அதில் நான்கு வகையான சிலம்பம் விளையாட்டுகள் நடத்தப்பட இருக்கிறது.இதை நடத்தும் நடுவர்கள் யார் என்ற விவரம் இதுவரைதெரியவில்லை .இவைகளை எல்லாம் அரசு அதிகாரிகள் விளக்கி அனைத்து சிலம்ப ஆசான்களையும் அழைத்து, ஒருங்கிணைத்து ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலமாக சிலம்பத்திற்கு புத்துணர்ச்சியும், புதிய வழிகளையும் காட்ட வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசைஇப்படியே சிலம்பம் போட்டிகளை அரசு நடத்தினால் விரைவாக சிலம்பம் அழிந்து விடும்.சிலம்பத்தின் மூலம் எதிர்காலத்தை எண்ணி இருக்கின்ற பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு எந்த பலனும் கிடைக்காமல் போய்விடும் என்பதை மிகவும் வேதனையோடு தெரிவித்துக் கொள்கிறோம் இவ்வாறு கலை முதுமணி. ஆர். முருகக்கனி ஆசான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.