X தளத்தில் ஒரு பதிவு காலம் கடந்த நிகழ்ச்சியை நினைவு படுத்துகிறார்கள்… நன்றி.

.சோ (துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர்) சொன்ன கண்ணீர் செய்தி
அன்று … தமிழகத்தில் திமுக ஆட்சி கருணாநிதி முதலமைச்சர்சோ அவர்களுக்கு செய்தி வருகிறது
பெருந்தலைவர் காமராஜர்காலையிலிருந்து சாப்பிடவில்லை சாப்பிட மறுக்கிறார் அழுது கொண்டே இருக்கிறார் என்ற செய்தி கேட்டவுடன்பெருந்தலைவர் காமராஜர் இல்லத்திற்கு விரைவாக செல்கிறார் சோகாமராஜர் வீட்டினுள் செல்லும் சோ காமராஜரை பார்க்கிறார்பெருந்தலைவர் காமராஜர் சோகத்துடன் கண்ணீருடன் காணப்படுகிறார்சோ வை பார்த்தவுடன் காமராஜர் வா ஊட்கார் என்று அருகில் உள்ள நாற்காலியில் சோ உட்கார் கூறஅப்போதுசோ பெருந்தலைவர் காமராஜரை பார்த்து ஏன் இப்படி அழுது கொண்டிருக்கிறீர்கள் என்ன நடந்தது என்றுஉங்கள் தாயார் இறந்த போது கூட அழவில்லையே என்று காமராஜரை பார்த்து சோ கேட்கஅதற்கு காமராஜர் உனக்குத் தான் தெரிந்திருக்குமே என்று சோ வை பார்த்து கேட்கசொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன் என்று சோ கேட்கதமிழ்நாட்டில் சாராய(மது) கடையை திறந்து விட்டுட்டான் பாத்தியா என்று கூறிக்கொண்டு தலையில் தன் கையால் அடித்துக் கொண்டு காமராஜர் அழுது கொண்டே இருந்தார்.இதை பார்த்த சோ ஐயா அழாதீர்கள் தமிழ்நாடு மக்கள் உங்களுக்கு செய்த பாவத்திற்கு அவர்கள் தான் அழ வேண்டும்.உங்களுக்கு எதிராக ஓட்டு போட்ட மக்கள் தான் அழ வேண்டும் நீங்கள் ஏன் அழுகிறீர்கள் சோ பெருந்தலைவரை பார்த்து கேட்டார்.அதற்கு காமராஜர் மக்கள் பாவம் பா இப்போது தான் ஒரு தலைமுறை ஏழை மற்றும் அடித்தட்டு மக்கள் படித்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்குடி என்பதை பற்றி தெரியாமல் மறந்து இருந்தார்கள் இனி குடியால் தமிழக மக்கள் வாழ்க்கை பாழாய் போய்விடும் என்று சொல்லிய படியே தலையில் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தார் காமராஜர்இதை பார்த்த சோகாமராஜரை பார்த்து ஐயா எல்லாம் மக்கள் தலைவிதி படி நடக்கும் வருகிறேன் என்று கூறிக்கொண்டு சோ சோகத்துடன் காமராஜர் வீட்டை விட்டு வெளியே வந்தார்.அப்போது சோ நினைத்தாராம் பெருந்தலைவர் காமராஜருக்கு குடும்பம் இல்லை நினைப்பேன் அது தவறு புரிந்து கொண்டேன் தமிழக மக்கள் அனைவரையுமே அவர் தன் குடும்பமாக நினைத்து வாழ்ந்திருக்கிறார் இந்த மகானை தோற்கடித்த மக்கள் பெரும் பாவத்தை செய்து விட்டார்கள் என்று நினைத்து கவலை அடைந்தேன் …திரு சோ – அரசு நாயகன்