fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

கொரோனாவால் தாங்க முடியல…. கொம்பன் வர்றானே…! கலங்கும் தமிழ்நாடு

Amban cyclone formed

சென்னை:

தென் கிழக்கு வங்க கடலில் ஆம்பன் புயல் நாளை உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது: தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் ஆம்பன் புயல் நாளை உருவாக வாய்ப்பு உள்ளது. அதே இடத்தில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்.

17ம் தேதி வரை வடமேற்கு திசையிலும், அதன் பிறகு வடகிழக்கு திசையிலும் புயல் நகர வாய்ப்பு உள்ளது. புயலால், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

ஆம்பன் புயலால் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யக்கூடும். காற்று பலமாக வீசும். ஆகவே வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம். தெற்கு மத்திய வங்க கடல், லட்சத்தீவு, குமரி கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் தத்தளிக்கும் சூழலில்,  ஆம்பன் புயல் பற்றி வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close