fbpx
GeneralRETamil News

பெண்கள் வெரும் அழங்காரத்தோடு திருப்தி அடைவதால் , விடுதலை வேட்கை பிறப்பதில்லை” என்ற பெரியாரின் வரிகளை உண்மையாக்கி உள்ளார் ஃபௌஸியா

பெண்களுக்கு அதிகம் பயன்படாதா பிசினஸ் பாதையிலும் தடம்பதித்த வெற்றி முலக்கங்களின் அனுபவ அணிவகுப்பு தொடர். சென்னை இஃப்பாவின் மரைன் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவன உரிமையாளர் ஃபௌஸியா.

படிப்பும் பின்புலமும் மட்டுமே வெற்றி பெறுவதற்கு அடிப்படை தகுதிகள் இல்லை என்பதற்கு மற்றொரு உதாரணம் ஃபௌஸியா. கணவருக்கு உதவ வந்த ஃபௌஸியா கிடைத்த அனுபவங்களைக் கொண்டு தொழில் முனைவோராக தனிப்பாதையில் களமிறங்கினார் ஃபௌஸியா தடைகள் பலவற்றையும் கடந்து இரண்டு ஏற்றுமதி நிறுவனங்களுக்கு  முதலாளி வெற்றி பெற்று வருகின்றனர்.
சென்னையில் மிகவும் ஏழ்மை குடும்பத்தில் பிறந்தவர்  ஃபௌஸியா, அப்பா மீன்கடை கூலி வியாபாரி இவர்  கூட பிறந்தவர்கள் ஒன்பது பேரில் ஃபௌஸியா கடைக்குட்டி, அரசுப் பள்ளியில்தான் படித்தேன் குடும்ப வறுமையினால் +2 மேல் கல்வியை தொடர முடிய வில்லை, மேற்படிப்பு படிக்க முடியவில்லை.

இந்து மதத்தை சேர்ந்த நானும், இஸ்லாம் மதத்தைச் சார்ந்த இஸ்மாயிலும் இரண்டு வீட்டார் சம்மதத்தோடு காதல் திருமணம் செய்துகொண்டோம். மாமாவோட அரவணைப்பில் வளர்ந்த என் கணவர் நான்கு வயதில் தினக்கூலியாக மீன் வியாபாரத்தில் இறங்கினார்.

கல்யாணத்திற்கு பின் சொந்தமாக மீன் கடையைத் தொடங்கினார். படிப்படியாக உயர்ந்தார் தன் இரண்டு மகள்களையும் கவனித்துக்கொண்டு. பள்ளி ஒன்றை ஆரம்பிக்கும் என் சின்னவயசு இலக்குக்காக தொலைநிலை கல்வியில் B.Com படித்தேன், கம்ப்யூட்டர், டப்பிங், ஸ்போக்கன் இங்கிலீஷ் இந்த மாதிரி பல பயிற்சி வகுப்புகளுக்கு கூச்சப்படாமல் புது விஷயங்களை கற்றுக்கொண்டேன். ஒரு கட்டத்தில் பெரிய நஷ்டம் ஏற்பட்டு கணவர் நிறுவனத்தை மூடும் நிலைக்கு சென்றது.

ஒரு கம்ப்யூட்டர் உதவியோடு வீட்டிலிருந்தபடியே நிர்வாகப் பொறுப்பை கவனித்துக் கொண்டேன். மீன்களை நேரடியாக கொள்முதல் செய்கின்ற பொருப்பை தன் கணவர் கவனித்துக்கொண்டார், தினசரி வரவு செலவுகளை முறையாக பதிவு செய்வதோடு தேவைகளை தேவையில்லாத செலவுகளை குறைத்துக் கொண்டாம். மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியது தொழில்.

சிந்தாதிரிப்பேட்டில் ஒரு கடையை ஆரம்பித்தோம் பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்னாடி விற்பனையாளர்களுக்கு பெருசா மதிப்பு இல்லை. ஆண்கள் சார்ந்த தொழிலில் பெண்கள் இருப்பது சரிவராது என சிலர் பேசினர். அப்போவே இந்தத் தொழிலில் 80 சதவிகித  நிர்வாக பொறுப்பு களையும், “வாடிக்கையாளர்களும் ஆண்கள்தான் இருந்தார்கள்…

அதனால் வாடிக்கையாளர்கள் உட்பட பல தரப்புகள் எனக்கு மதிப்பு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்னுடைய இலக்காக வைத்து இருந்தேன் அதற்காக சில விஷயங்களை திட்டமிட்டு செய்தோம் நானும் என் கணவரும் aace export நிறுவனத்தை வெற்றிப் பாதைக்கு கொண்டு வந்தோம். இவ்வளவு அனுபவத்தோடு local மேனுஃபாக்சரிங் மட்டுமே கவனம்   செலுத்தாமல் ஏற்றுமதியாளர்களுகாக ஆக என்பது என முடிவுசெய்தோம்.

முந்தைய நிறுவனத்தை என் கணவர் கவனித்துக் கொண்டார்.  மேனுஃபேக்சர் எக்ஸ்போர்ட்  என்ற நிறுவனத்தை தொடங்கினோம். நான் கொள்முதல் செய்கின்ற கடல் உணவுகளை மேனுஃபாக்சரிங் எக்ஸ்போர்ட  நிறுவனத்தை கிட்ட கொடுத்து பார்க்கிங் செய்து. வாங்கி ஏற்றுமதி செய்கின்ற எக்ஸ்போர்ட் வேலை செய்ய ஆரம்பித்தேன் பெரிய பின்புலம் இல்லை. அதிக புறக்கணிப்பு தொழில் போட்டிகளை எதிர்கொண்டு நானே கூகுளில் பார்த்து வெளிநாட்டு நிறுவனங்கள் பற்றி தெரிந்துகொண்டு ஏற்றுமதி செய்து ஆர்டர் கேட்டு விண்ணப்பித்தேன்

பல இடர்பாடுகளுக்கு பின் படிப்படியாக சில நாடுகள் ஏற்றுமதி ஆர்டர்களை பெற்று பல்வேறு சவால்களை எதிர்கொண்டேன்.  அதனால் எட்டு ஆண்டுகளுக்கு அனுபவத்தால் மேனுஃபாக்சரிங் ஏற்றுமதி  செய்ய முடிவுசெய்தோம். அதே நிறுவனங்களுக்கு நேரில் சென்று பல்வேறு கட்டுப்பாடுகளை மீறி உள்கட்டமைப்புகளை தெரிந்து கொண்டேன்.

தானாகுளம் 1 அரை ஏக்கர் நிலத்தை வாங்கி பல தடைகளை எதிர்கொண்டு அந்த இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய   உள்ள ஏற்றுமதி நிறுவனத்தின் கட்டிடத்தை 2018 ஆம் ஆண்டு கட்டி முடித்தேன்.

கடல் உணவுகளை ஏற்றுமதி செய்ய      யூரோப் மற்றும் நான் யூரோப் என இரண்டு வகையான தரச்சான்றிதழ் தரப்படுகிறது. யூரோப் தரச்சான்று கிடைப்பது ரொம்ப கஷ்டம் ஆனால் அந்த சான்றிதழ் கிடைத்தால் ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகின் எல்லா நாடுகளுக்கும் ஏற்றுமதி பண்ணலாம். நான்யூரோப் கிடைத்தால் ஐரோப்பா நாடுகளை தவிர மற்ற நாடுகளுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும் , என் நிறுவனத்தை பார்வையிட்ட அதிகாரிகள் இவ்வளவு சிறப்பம்சங்கள் கூடிய நிறுவனங்களை பார்ப்பது அரிது அப்படி அனுமதி கொடுத்த சான்றிதழ் பெற்ற முதல் பெண் நான்,சென்னையில் ஏற்றுமதி செய்கிறேன்.

மக்களுக்கு ஏற்றுமதி செய்ய ஆர்டர்களை குறைபாடுகள் இருந்தால் ஆர்டர் போய் சேரும் போது மீன்கள் கெட்டுப் போயிருந்தால் நம் நிறுவனத்தோடு தரத்தை படிப்படியாக குறைத்து விடுவர், இதனால் நம் மீது உள்ள மதிப்பும் குறையும் அதனால் ஐரோப்பா நிறுவனங்களில் ஏற்றுமதி செய்யும் பொருட்களை எதிர்பார்ப்புகளை தெரிந்துகொள்ள ஒரு வருடம் செலவு செய்தேன்,

அதே நேரம் மற்ற நாடுகளுக்கு தொடர்ந்து ஏற்றுமதி செய்தேன் இங்கலாந்து மான்செஸ்டர் நகருக்கு ஆயிரம் கிலோ மீன்களை ஏற்றுமதி செய்தேன். முதல் ஐரோப்பியர் ஆர்டர் வெற்றிகரமாக அமைய , அடுத்த ஐரோப் ஆர்டர் கிடைத்துள்ளது , ஒவ்வொரு கடல் பரப்பை பொருத்தும் அதுல வளரும் கடல்மீன்களின் வகைகளில் வளர்ச்சியும் சுவையும் மாறுபடும். அதனால் பல பகுதிகளில் இருந்து மீன்களை கொள்முதல் செய்தாலும் எல்லா மீன்களும் ஒரே தரத்தில் இருப்பதை உறுதி செய்வோம். ஏற்றுமதி செய்து மீதமுள்ள  இருக்கும் மீன்களை மதிப்பு குறையும் மீன்களை கருவாடு செய்து விற்பனை செய்கிறோம்.


இதைத் தவிர மீன் கழிவுகளை கால்நடைகளுக்கு  விற்பனை செய்கிறோம். தினமும் காலை 4 மணிக்கு எழுந்து வீட்டு வேலையை முடித்து,தொழுகையை முடித்து, 5 மணிக்கு என் கணவர் நிறுவனத்திற்கு சென்வேன், தானா குளத்தில் உள்ள தன்  நிறுவனத்திற்க்கு சென்று  அங்குள்ள ஊழியர்களுடன் இணைந்து கிளினிக், packing இப்படி எல்லா வேலை களும் செய்வேன். பெரும்பாலான உணவுப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆவதால் தரமான மீன்கள் உள்ளூர் மக்களுக்கு கிடைப்பதில்லை. அதனால் தரமான கடல் உணவுப் பொருட்களை நேரடியாக ஆன்லைன் மூலம் விற்கவும் fresh fish என்ற  online நிறுவனத்தை கூடிய விரைவில் தொடங்க உள்ளோம்.

பெண்கள் அதிகம் வேலைக்கு வருவதால்,,ஏற்றுமதியாளர்களாகவும் அதிகம் பெண்கள் உருவாக்கவும், அவர்களுக்கு உதவியாகவும் இருப்பேன். இப்பொழுது 55 ஊழியர்களுக்கு முதலாளி ஆண்டு வருமானம் 30 கோடி ரூபாய் டேன்ஓவர் செய்கிறேன். இரண்டு நிறுவனங்கள் சிங்கப்பூர், துபாய், சவுதி அரேபியா உட்பட 15 நாடுகளுக்கு தினமும் 5டன் அளவுக்கு மீன், விரால், நண்டு  போன்ற கடல் உணவுகளை ஏற்றுமதி செய்துவருகின்றனர்.

மத்திய அரசு கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி அமைப்பு வழங்கிய இந்தியா அளவிலான சிறந்த பெண் ஏற்றுமதியாளர்கான விருது சமீபத்தில் எனக்கு கிடைத்தது என்று கூறினார்.
இத்துடன் என் கணவர் நிறுவனத்தையும் கவனித்து வருகிறேன், அதோடு சென்ன உட்பட அனைத்து மாவட்டங்களில் உரக்க நட்சத்திர ஓட்டல்கள், கல்லூரிகளுக்கு,, உணவகங்கள் என அனைத்துக்கும் கடல் மீன்களை தினம் 1000 கிலோ மீன் விற்பனை செய்து வருகிறோம்.

?V. NandhiniPrakash

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close