fbpx
RETamil NewsTrending Nowஉலகம்

அரை கோடியை தொடுகிறதா கொரோனா பாதிப்பு…? அலறி துடிக்கும் அமெரிக்கா

43.39 lakh people affected by corona worldwide

ஜெனீவா: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43.39 லட்சத்தை கடந்துள்ளது.

உலகில் 200க்கும் அதிகமான நாடுகளை அச்சுறுத்தி வருகிறது கொரோனா. அந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43.39 லட்சமாக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,92,804 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16,00,728 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 14,08,636 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயினியில் 2,69,520, ரஷ்யாவில் 2,32,243, பிரிட்டனில் 2,26,463, இத்தாலியில் 2,21,216, பிரான்சில் 1,78,225, பிரேசில் 1,77,602 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை எட்டி இருக்கிறது.

ஜெர்மனியில் 1,73,171, துருக்கியில் 1,41,475, ஈரானில் 1,10,767, சீனாவில் 82,926, பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 83,425 ஆக அதிகரித்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close