fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

பாபர் மசூதி இடிப்பு வழக்கு..! சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அத்வானி இன்று ஆஜர்!

Advani appear in CBI special court

லக்னோ:

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று ஆஜராகிறார்.

1992ம் ஆண்டு டிசம்பரில், உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் இருந்த, பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, பாஜக மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் உள்ளிட்டோரை விடுவித்து, அலகாபாத் உயர் நீதிமன்றம், 2001ல் உத்தரவிட்டது.

இந்த வழக்கை ஆகஸ்ட், 31க்குள் விசாரணையை முடிக்க அறிவுறுத்தி வழக்கை சிபிஐ தினசரி விசாரித்து வருகிறது சிபிஐ. வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று ஆஜரானார்.

நீதிபதி எஸ்.கே.யாதவ் முன், அவர் அளித்த வாக்குமூலம், பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று அத்வானி நீதிமன்றத்தில் ஆஜராகி, வாக்குமூலம் அளிக்க உள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close