fbpx
RETamil News

தமிழகத்தில் பாஜக ஒரு எம் எல் ஏக்கள் கூட இல்லாமலேயே ஆட்சி நடத்துகின்றது;கி.வீரமணி பொளேர்!

தஞ்சாவூர்:

ஒரு எம்எல்ஏ கூட இல்லாத பாஜக தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இது குறித்து கும்பகோணத்தில் அவர் செய்தியாளாகளிடம் கூறியதாவது:

மாணவர்களின் கல்வியை பாதிக்கக்கூடிய வகையில் மத்திய அரசு தன்னுடைய பணிகளை செய்து வருகிறது. நீட் தேர்வு என்பது அலங்கோலமாக, குளறுபடியான தேர்வாக இருக்கிறது.

அரசியல் சட்டத்தையே தற்போது மத்திய அரசு மதிப்பதாக தெரியவில்லை. ஆளுனர் ஆட்சி நடந்தால் மட்டுமே ஆளுநருக்கு வேலை அல்லது நெருக்கடி நிலை ஏற்படும்போது தில்லிக்கு தகவல் கொடுப்பது மட்டும்தான் அவருடைய வேலை.

அதைவிடுத்து, ஒவ்வொரு இடத்துக்கும் சென்று போட்டி அரசாங்கம் நடத்துவது அவருடைய வேலை அல்ல. எனக்கு அதிகாரமுள்ளது என்று ஆளுநர் சொல்வதை விட கேவலமான விஷயம் வேறு எதுவுமே இல்லை.

அதை விட கேவலம் தமிழக அமைச்சர்கள் ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று கூறுவது. தாங்கள் அடிமைகளாக இருப்பதற்காக அமைச்சர்கள், மாநில உரிமைகளை விட்டுக் கொடுப்பது இன்னும் மோசமாக உள்ளது.

ஜெயலலிதா ஆட்சியின் போது ஒருமுறைகூட துணைவேந்தா நியமனம் ஆளுநர்மாளிகையில் இருந்து வந்தது உண்டா என்பதற்கு தற்போது அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும்.

மத்திய அரசு, மாநில அரசுகளை பழிவாங்கும் நோக்குடன் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை போல அறிவிக்கப்படாத ஆளுநரின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

முட்டைக்குள்ளே ஊழல் முறைகேடு செய்துள்ளார்கள் என்றால் அவர்களை பாராட்ட வேண்டும். இதில் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளும் தற்போது உடந்தையாக இருக்கிறாாகள் என்பது கேவலமாக இருக்கிறது.

இந்த ஊழல் எல்லாம் சினிமாவிலும், நாடகத்திலும் நடப்பது போல் உள்ளது. இவர்களின் இந்த அறிவியல் பூர்வமான ஊழலை வைத்து மிகப்பெரிய நாவலே எழுதலாம் என்று செய்தியாளர் சந்திப்பின் பொது கூறினார்  கி. வீரமணி.

Related Articles

Back to top button
Close
Close