fbpx
Others

உலக செய்திகள்

ஆக்கிரமிக்கப்பட்ட' நிலத்தில் சீனப் பாலம்-


'சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட' நிலத்தில் சீனப் பாலம்- இந்திய அரசு
பாங்காங் டிசோ ஏரியில் உள்ள சீனப் பாலம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் இருப்பதாக இந்திய அரசு கூறியுள்ளது.
பாங்காங் ஏரியில் சீனாவால் கட்டப்பட்ட பாலம் சீனத் தரப்பின் “சட்டவிரோத ஆக்கிரமிப்பின்” கீழ் உள்ள பகுதிகளில் அமைந்துள்ளது , மேலும் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டை மற்ற நாடுகள் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக இந்தியா கூறியள்ளது.
பாங்காங் ஏரியில் சீனாவால் கட்டப்பட்டு வரும் பாலத்தை அரசு கவனத்தில் கொண்டுள்ளது. 1962 முதல் சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் தொடர்ந்து இருக்கும் பகுதிகளில் இந்த பாலம் கட்டப்படுகிறது. இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்திய அரசு ஒருபோதும் ஏற்கவில்லை.
ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மற்ற நாடுகள் மதிக்க வேண்டும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்பதை அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்தியுள்ளது என அரசு பதில் கூறியது.
கிழக்கு லடாக் மோதல் தொடர்பாக சீனாவுடனான பேச்சுவார்த்தையில் இந்தியாவின் அணுகுமுறை மூன்று முக்கிய கொள்கைகளால் வழிநடத்தப்படுகிறது என்று வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி முரளீதரன் மக்களவையில் தெரிவித்தார்.
இரு தரப்பினரும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டைக் கண்டிப்பாக மதிக்க வேண்டும், இரு தரப்பும் ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்ற முயற்சிக்கக் கூடாது, மேலும் இரு தரப்புக்கும் இடையிலான அனைத்து ஒப்பந்தங்களும் முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றார்.
2020 ஆம் ஆண்டில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஏசி) கால்வான் மோதலில் இருந்து இந்தியா-சீனா மோதலில் உள்ளன.
ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக இந்திய மற்றும் சீன துருப்புக்கள் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் கடுமையான மோதலில் ஈடுபட்டுள்ளன. முட்டுக்கட்டையை தீர்க்க இராணுவ மற்றும் இராஜதந்திர ஈடுபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Articles

Back to top button
Close
Close