fbpx
Others

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்நடப்பதுஎன்ன …?

  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களுக்கு, சென்னை கலெக்டர் அவர்கள் வழங்கும் தினக்கூலி ஊதியத்தின் அடிப்படையில், அண்ணா பல்கலைகழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் தினக்கூலி உயர்த்தி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தினக்கூலியில், ப்ரொபஷனல் அசிஸ்டன்ட்டாக அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி புரியும் பணியாளருக்கு மிகவும் குறைந்த ஊதிய நிர்ணயித்து வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அப் பணியாளர்கள் ஊதிய உயர்வுக்காக (6% லிருந்து 12% ) கோரிக்கை மனுவை அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அளித்துள்ளார்கள். இந்த கோரிக்கை அடிப்படையில் கடந்த நவம்பர் மாதம் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக நிதி குழுவில் மேலும் 6 சதவீதம் உயர்த்தி வழங்க ஒப்புதல் பெற்ற பின்பும், அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம், இந்நாள் வரை ப்ரொபஷனல் அசிஸ்டன்ட் பணியாளருக்கு ஊதிய உயர்வுக்கான ஆணை வழங்காமல், அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற வகையில் நிர்வாகம் செயல்படுகிறது.
இது தொடர்பாக அப்பணியாளர்கள் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் அவர்களை சந்தித்து பலமுறை கடிதம் அளித்தும் கண்டு கொள்ளாத நிர்வாகத்தை எண்ணி மனவேதனையில் பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களின் கோரிக்கை நிறைவேற்ற தமிழக அரசு அண்ணா பல்கலைக்கழக நிதிக்குழுவின் ஒப்புதலின்படி ஊதிய உயர்வு வழங்க ஆணையிட வேண்டும் என எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

Related Articles

Back to top button
Close
Close