fbpx
RETamil Newsஉலகம்

உலக வங்கி தலைவர் பதவிக்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் தேர்ந்தெடுக்கப்படுகிறாரா?

உலக வங்கி தலைவர் பதவிக்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா மற்றும் ஐ.நா.விற்கான அமெரிக்கமுன்னால் தூதர் நிக்கி ஹாலே ஆகியோர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னாள் தலைவரின் திடீர் ராஜினாமா ;

உலக வங்கி தலைவர் பதவியில் கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை கொரிய-அமெரிக்க வம்சாவளியைசேர்ந்த ஜிம் யோங் கிம் (56) பதவிவகித்து வந்தார்.இந்நிலையில் அவரது பதவிக்காலம் 2017-ஜூன் மதம் 30-ஆம் தேதியிலிருந்து முடிவடைந்தது. ஆனால் கிம் அவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவரே இரண்டாவது முறையாகவும் உலக வங்கி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவரது பதவிக்காலம் இருந்தும் அவர் தீடிரென பதவி விலகப்போவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த தலைவர் பதவியை நிறைவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உலக வங்கி தலைவர் பதவிக்கு போட்டியிடும் நபர்கள் ;

தற்போது கிம் அவர்கள் பதவிவிலக போவதாக செய்தி வெளியிட்டதை அடுத்து . அந்த உலக வங்கி தலைவர் பதவிக்கு போட்டியிடும் நபர்களின் பட்டியலில் அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா , ஐ.நா.விற்கான அமெரிக்கமுன்னால் தூதர் நிக்கி ஹாலே ஆகியோர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் உலக வங்கியில் அமெரிக்கா மிகப்பெரிய பங்குதாரராக இருப்பதால் அமெரிக்கர்தான் உலக வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டு வருகிறார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close