fbpx
Others

கவர்னர் காரணம் ஏற்புடையதாக இல்லை யதாக இல்லை –

நீட் ஆய்வு குழுவின் உறுப்பினர் ரவீந்திரநாத் பேட்டி


நீட் மசோதா: கவர்னர் சொல்லும் காரணம் ஏற்புடையதாக இல்லை - நீட் ஆய்வு குழுவின் உறுப்பினர் ரவீந்திரநாத் பேட்டி
நீட் விலக்கு மசோதா தொடர்பான கவர்னரின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது என ஏ.கே.ராஜன் தலைமையிலான நீட் ஆய்வு குழுவின் உறுப்பினர் ரவீந்திரநாத் கூறியுள்ளார்.
‘நீட்’ விலக்கு சட்டமசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பிய விவகாரம் தொடர்பாக, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க நாளை சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
‘நீட்’ மசோதாவை திருப்பி அனுப்பியதையடுத்து நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் இருந்து தமிழக எம்.பி.க்கள் 2-வது நாளாக இன்றும்  வெளிநடப்பு செய்தனர்.
இந்தநிலையில்,   ஏ.கே.ராஜன் தலைமையிலான நீட் ஆய்வு குழுவின் உறுப்பினர் ரவீந்திரநாத் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
நீட் விலக்கு மசோதா தொடர்பான கவர்னரின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது.
மசோதா திருப்பி அனுப்பியது தொடர்பாக கவர்னர் சொல்லும் காரணம் ஏற்புடையதாக இல்லை.
நீட் தேர்வு ஏழைய எளிய மாணவர்களுக்கு உதவும் என்ற கவர்னரின் கருத்து சரியானதல்ல.
நீட் விலக்கு மசோதா தொடர்பாக தமிழக கவர்னரின் அறிக்கை உண்மைக்கு புறம்பாக உள்ளது.
நீட் தேர்வு கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு எதிரானது என்பதை ஏ.கே.ராஜன் குழு அறிக்கை     விளக்கியுள்ளது என்றார்.

Related Articles

Back to top button
Close
Close